பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஒரு சத்தியத்தின் அழுகை

'அஞ்சலங்கறது யாரு?"

"நான்தானுங்க... ஒங்களுக்கு என்ன வேணும்...?"

"உன்னோட புருஷன் ராமலிங்கமா? ஹார்பார்ல வேல பாக்குறாரா?”

"ஆமாங்க..." "அவரு கெரேன்ல இருந்து கீழே விழுந்துட்டாரு. ஸ்டான்லில அட்மிட் பண்ணியிருக்கு... உன் பேரச் சொல் லியே

புலம்பிக்கிட்டிருக்காரு. வா... கார்ல கொண்டு போய் விடுறோம். அஞ்சலை, கீழே விழாமல் இருப்பதற்காக வந்தவரின் கையையே ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள்.

"உன் புருஷன் தேக்கு மரம் மாதிரி கீறான்னு அந்த பாவி சொன்னாளே... சொன்னாளே." என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கிளம்பினாள்.

பதினைந்து நாட்கள் ஒடியிருக்கும். அவள் கண் முன்னாலேயே பலர் அவள் வீட்டைப் பார்க்க வந்தார்கள். அடுத்த மாதம் அவள் காலி செய்வாள் என்ற அனுமானத்தில் வந்திருக்கும், எதிர்கால குடித்தனக்காரர்கள் அவர்கள். நான் ஒண்ணும் காலி பண்ணல. மருவாதியா பூடுங்க' என்று அவர்களை விரட்டியடித்தாள்.

அஞ்சலை, ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள். "ஆயா. இன்னிக்கு... நீ கொஞ்சம் முறவாசல் செய்திடு. நான் இன்னொரு நாளிக்கு உனக்கு பண்ணிடுறேன். டயமாயிட்டு. அவரு காத்திக்கினு இருப்பார்" (ஒவ்வொரு குடித்தனக்காரரும் ஆளுக்கு ஒரு காவாயை பெருக்கிக் கக்கூலைக் கழுவி சுத்தம் செய்யவேண்டும். இதற்கு முறைவாசல் என்று பெயர்).

"இப்போ கோர்ட்ல போயி... பயின் கட்டணும். லேட்டாயிட்டே. மீனாட்சிய கேட்டுப்பாரு. மீனாட்சி இங்க வாடி. நம்ம அஞ்சலைக்கு இன்னிக்கு முறவாசல் பண்ணிடு. உன் ஆம்புடையா எப்படிம்மா கீது..."

"அதை ஏன் கேக்குற ஆயா... கால எடுக்கணுங்றாங்க." அஞ்சலையால் அழாமல் இருக்க முடியவில்லை. இதற்குள் மீனாட்சி, முறவாசலுக்காக அஞ்சலையின் துடப்பத்தை எடுத்தாள். திடீரென்று பால்கனியிலிருந்து உச்சஸ்தாயியில் ஆட்டுக்காரம்மா கத்தினாள்.

"ஏய். மீனாட்சி, துடப்பத்த கீழபோடு. அவங்கவங்க... முறவாசல. அவங்கவங்கதான் செய்யணும்..."

"அவளுக்கு ஆஸ்பத்திரிக்கு லேட்டாயிட்டாம்மா..."