பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஒரு சத்தியத்தின் அழுகை

அஞ்சலை தன்னை மறந்தாள். கணவன் கஞ்சி இல்லாமல் காத்திருப்பானே என்ற ஆதங்கம், கொத்தடிமை போல் முறவாசல் செய்த கொடுமை. கணவனுக்குக் கால் போய் விடும் என்ற பீதி - அத்தனையும் அவளை ஆட்கொண்டது. என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் ஆட்டுக்காரம்மாவின் குடத்தை எடுத்து, தூரபோட்டு விட்டு தன் குடத்தை எடுத்து வைக்கப் போனாள். அதைத் தடுக்க வந்த வீட்டுக்காரியைத் தள்ளினாள். அவள் படிக்கட்டில் விழுந்து எழ முடியாமல் தவித்தாள். நெற்றியில் லேசாகக் காயம். அஞ்சலை தான் அவளைத் துக்கி விட்டாள்.

"என்னையா... அடிச்சிட்ட... ஏய் கமலா. அய்யாவுக்குப் போன் பண்ணுடி... சீக்கிரமா போடி தத்தேரி முண்ட...' 'ஆட்டுக்காரம்மா மாடிப்பாடி யேறிப் போனாள். தலையைச் சுற்றி ஒரு கட்டுப் போட்டுக் கொண்டாள். வேடிக்கை பார்த்த கூட்டத்தைப் பொருட்படுத்தாமல், அஞ்சலை குடத்தை எடுத்துக் கொண்டு இருப்பிடத்திற்குப் போனாள். பார்லி அரிசியைக் காய்ச்சினாள். காபி போட்டாள். புருஷனுக்கு கால் போய்விடுமே என்ற அச்சமும், அவன் காத்திருப்பானே என்ற வேகமும்தான் அவள் சிந்தனையை ஆட்கொண்டிருந்தன. * -

பார்லி கஞ்சியை, ஒரு கிண்ணத்தில் வைத்து, முந்தானை சேலையால் மூடிக்கொண்டு காப்பி டம்ளரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அஞ்சலை வாசலுக்கு வந்த போது போலீஸ் வான் வந்தது. -

'அஞ்சலங்கறது யாரு..."

"நான்தானுங்க... என் வீட்டுக்காரருக்கு எதுவும் ஆயிட்டா?”

"அதெல்லாம் ஸ்டேஷன்ல வந்து சொல்றோம். நீ இப்போ வண்டியில... ஏறு..."

"அது ஆஸ்பத்ரில. காத்துக்கினு இருக்கும் சாமி. நான் கஞ்சி குடுத்துட்டு. வந்துடுறேன்."

"ஏய்... பொல்லாத வாயாடியா இருப்ப போலிருக்க... நீ நிச்சயம் அந்த அம்மாவை கத்திய வைச்சி. குத்திருக்கத்தான் செய்வே. மரியாதயாய் வண்டில ஏறுறியா... இல்லியா?"

போலீஸ்காரர் கை மேலே படாமல் இருப்பதற்காக அஞ்சலை லாரியில் ஏறினாள்.

அஞ்சலை இப்போது லாக்கப்பில் இருக்கிறாள். அவள் கணவன் அவளைக் காணோம்ே என்று ஒடிந்துபோன காலால் உதைத்துக் கொண்டிருக்கிறான். வீட்டை எதிர்கால குடித்தனக்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாடகை இப்போது நாற்பது ரூபாய். வேனுமானால் போங்கள்.