பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்மம் ஜெயிக்கும்

'நீங்கெல்லாம் இப்படி அசடுகளாய் இருக்கிறதினால் தான். அந்த மானேஜர் நினைச்சபடி நடக்கிறான். கேட்க ஆளு இல்லன்னு காட்டு தர்பார் நடத்துறான்."

“ஏண்டா சேகர் இப்படிக் குதிக்கிற... விஷயத்தை நீயும் சொல்ல மாட்டே... நளினியையும் சொல்ல விடமாட்டே... நாங்களா ஞானக் கண்ணால புரிஞ்சிச்கணும். புரிய முடியாட்டா அசடுங்க. உன் அகராதியே தனிதாண்டா...'

"சொல்றத கேளுங்கப்பா. நளினிக்கு, ஹெட்குவார்ட்டர்ஸில் இருந்து 300 ரூபாய் அரியர்ஸ், ஜூன் மாதமே வந்திருக்கு. அவன் இன்னைக்குத்தான் இவளுக்குக் கொடுத்திருக்கிறான்."

"இன்னைக்காவது கொடுத்தானே... எனக்கு ஒரு வருவடிம் இரண்டு மாதம் மூணு நாள் கழித்துக் கொடுத்தான்."

"விட் அடிக்கிறதுக்கு இது நேரமில்ல. நளினியை ஜூன் மாதம் மூனாம் தேதி பணம் பெற்றதா கையெழுத்து போட ச் சொல்லியிருக்கான்... இந்த அசடும் ஆன்டி - டேட் போட்டு கொடுத்திருக்கு."

"ரிக்கார்ட்ல அவள் கையெழுத்துப் போட்ட பிறகு நாம என்னடா செய்ய முடியும்?"

"அவள் இன்னைய தேதியை போட்டிருந்தாலும், அதுக்கும் ஏதாவது ஒரு சாக்கு சொல்லியிருப்பீங்க..."

நளினி கண்ணிர் விட்டாள். "உங்களுக்கு நல்லா தெரியும்... என் அம்மா போன மாதம் ஆஸ்பத்திரியில் எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு. அப்போ நான் பணத்துக்கு நாயா அலைஞ்சேன். இந்தப் பாவி... என் பன்னத்தை ஐந்து மாசமா வச்சிருந்தும் மூச்சு விடாம இருந்திட்டான்... கடைசியில... என் அம்மா மூச்சு தான் பிரிஞ்சுது.

சேகர் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்ததுபோல், மோவாயைத் தடவி விட்டுக்கொண்டான்.