பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்மம் ஜெயிக்கும் 51

"நாம எல்லோருமா சேர்ந்து, மானேஜர் பண்ணுற அயோக்கியத்தனத்தை எம். டி. க்குத் தெரியப்படுத்துவோம். ஊழியருக்கு வந்த பணத்தை ஆறுமாதம் கையில வச்சிருந்துட்டு, அப்புறமா கொடுக்கிறான். இது முதலாவது கம்ப்ளெயிண்ட்."

"இரண்டாவது ஒரு nரியஸ் கம்ப்ளெயிண்ட்.. ஊழியர்கள் ஆபீஸ் விஷயமா வெளில போகும்போது. டாக்ஸியில் போகலாம்னு ரூல்ஸ் இருக்கு. இவன் என்னடான்னா. போகாத ஊழியர்கள் போனதா சொல்லி. டாக்ஸிக்கு பில் போடச் சொல்றான். பணத்தை மட்டும் அவன் எடுத்துக்கிறான்... மூனாவது, ஆபீஸ் காரில், அவன் மாமியார்ல இருந்து மச்சினன் வரைக்கும் போறாங்க... நாலாவது, குறிப்பிட்ட ஒரு ஏஜெண்டுக்கு சலுகை பண்ணனுங்கறதுக்காக அவனே ஒரு நோட்டை டிக்டேட் செய்து, சம்பந்தப்பட்ட கிளார்க்கிடம் கையெழுத்துப் போடச் சொல்றான். இதெல்லாம் வச்சு... ஒரு ஜாயிண்ட் ரெப்ரசேன்டேஷன் கொடுக்கணும்."

"எதற்கு சேகர் வம்பு... பேசாம மொட்டை மனு போடுவோம்." என்றார் சின்னையன்.

"மொட்டைப் பெட்டிஷன் போடுறதைவிட வேற ஒரு பேடித்தனம் இருக்க முடியாது."

சேகர், நீ விவரம் அறியாத பையன்... என்னோட இருபது வருட சர்வீஸ்ல மொட்டைப் பெட்டிஷனைப் பற்றி எதுக்குச் சொல்றேன்னா..."

சேகர் அவரை மேற்கொண்டு பேசவிடவில்லை. "ஆல் ரைட். நானே... என் சொந்தக் கையெழுத்தை முழுசா போட்டு. எம். டி. க்கு அனுப்பி வைக்கிறேன். ஆனால் ஒண்ணு. என்குயரி வரும்போது. நீங்கெல்லாம் நடந்ததைச் சொல்லணும். மானேஜர் இதுவரைக்கும் எனக்கு எந்தவிதக் கெடுதலும் செய்யவில்லை. தனிப்பட்ட மனிதர் எவனும் அக்கிரமம் செய்யக் கூடாதுங்றதுக்காகத் தான் எழுதறேன். அவருடைய முறைகேடான செய்கையால... நளினி மாதிரி நீங்கள் எல்லாம் பாதிக்கப்படுறிங்கன்னு நினைச்சுதான் எழுதப்போறேன்." - தலைமைக் குமாஸ்தா, கும்பலின் பிரதிநிதிபோல் பேசினார். "சேகர், வேறு எந்த விஷயத்தில் எங்களை நம்பாவிட்டாலும் இந்த விஷயத்தில் சத்தியமாய் நம்பலாம்... என்குயரி வரட்டும்... புட்டுப்புட்டு வச்சிடுறேன்."

இரண்டு வாரங்கள் ஓடின. சேகர், சகாக்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்குப் போனான். தலைமைக் குமாஸ்தா அவனைக் கட்டித் தழுவினார். -