பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஒரு சத்தியத்தின் அழுகை

'சபாஷ் சேகர். உன் பெட்டிஷனுக்கு எபக்ட் இருக்கு ஒரு வாரமா மானேஜர் முகம் பேயறைஞ்சது மாதிரி இருக்கு. யார் போனாலும் உட்காருங்கன்னு மரியாதைக்குக் கூட சொல்லாத மனுஷன், இப்போ போனவுடனே, எழுந்து உட்காரச் சொல்றான். ஏதோ நடக்குது.'

"அப்புறம் இன்னொரு விஷயம். நல்லவேளை அந்த ஜால்ரா ராமனாதன் பயல் இல்லை. சொல்கிறேன்..." என்ற பீடிகையை, சிதம்பரம் போட்டுக் கொண்டே, மானேஜர் எம். டி. டெலிபோனில் பேசியதைக் கேட்டேன். நோ... நான் ஒன்னும் ஊழியருங்க பணத்தை வச்சிக்கல. நான் ஒன்றும் ஆபீஸ் காரை மிஸ்யூஸ் பண்ணல... நீங்க இங்க வரும்போது... உங்க பேத்தியை மகாபலிபுரத்துக்கு கூட்டிக்கிட்டு போனத. அபிவியல் கான்டாக்டா எழுதினேன். அவ்வளவுதான். மற்றப்படி இல்ல. எல்லாம். சேகர் பயலோட ஏற்பாடு என்று சொல்லிக்கிட்டு இருந்தான்... சம்திங் நடக்குது. சேகர், நீ மட்டும் இல்லன்னா இந்தக் கொம்பனை மடக்கியிருக்க முடியாது. உன்னால எங்களுக்கெல்லாம் மரியாதை." என்றான்.

முத்துசாமி ஒரு பிரச்சினை எழுப்பினார்.

“சேகர் ரகசியமாய் அனுப்பின புகாரை, எம். டி. பரிசீலனை செய்து, ஆபீஸிற்கு சர்பிரை லா வந்து என்குயரி நடத்தியிருக்கணும். அதை விட்டுட்டு டெலிபோனிலேயே புகார் விவரங்களைப் பத்தி, மானேஜர்கிட்ட சொல்றார்னா ஏதோ சதி நடக்குதுன்னு அர்த்தம்."

ஒரு மாதம் ஆகிவிட்டது. மானேஜர் தைரியமாகக் காட்சியளித்தார். சேகரிடம்கூட, தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்கிற மாதிரி சாடை மாடையாகப் பேசினார். முத்துசாமி தவிர, இதர சகாக்கள், அவனை விட்டு ஒதுங்குவதுபோல் தெரிந்தது.

தலைக்கு மேல் வெள்ளம்போன துணிச்சலில், சேகர் தனது பழைய புகாரையும், நியாயத்தைக் காணவேண்டிய மானேஜிங் டைரெக்டர் மானேஜருடன் சேர்ந்து கொண்ட அநியாயத்தை விவரிக்கும் புதிய புகாரையும் சேர்த்து, கம்பெனியின் ஒவ்வொரு டைரெக்டருக்கும் அனுப்பினான். இதை அவன் அனுப்புவதற்கு முன்னதாகவே தெரிந்து கொண்ட மானேஜர், அவனைப் பழிவாங்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவன் எழுதும் குறிப்புக்கள் ஏனோதானோ என்று இருப்பதாக மெமோ கொடுத்தார். அப்பாவுக்கு உடல்நலமில்லாததற்கு அவன் போட்ட