பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஒரு சத்தியத்தின் அழுகை

செருகியிருந்த வெள்ளைக் கைக்குட்டையை எடுத்து, கைகளைச் சொகுசாகத் துடைத்துக்கொண்டாள். பொன்னாத்தா ஒன்றும் புரியாமல் விழித்தாள். இளமங்கை நளினமாகப் பேசினாள்.

"ஏம்மா, உன்னைப் பாத்தா புத்திசாலியாத் தெரியுது. வைட்டமின் 'ளலி இல்லாததால் குழந்தைக்கு, பெரிபெரி என்ற நோய் வந்திருக்கு. புரதமும் போதலை. கார்டினால் மாத்திரைதான் கொடுக்கணும். சரிதானே டாக்டர்?"

சரிதான்." "அதனாலே நான் என்ன சொல்றேன்னு கேளும்மா. நாட்டு மருந்துன்னு ஏதாவது குடுத்தியானால் ஆபத்தாயிடும். குழந்தை பிழைக்கணும்னா டாக்டர் சொல்றதைக் கேக்கணும். என்ன அம்மா சொல்றே?"

இளமங்கை பேசியதை, இதர இரண்டு பிரமுகர்களும் திருப்தியுடன் அங்கீகரித்தனர். பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவம், தலையைப் பிய்த்துக் கொண்டார். பொன்னாத்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை. -

"மாமா, அம்மா என்ன சொல்றாங்க?" உறுப்பினர் பரமசிவம் உள்ளுறக் கோபப்பட்டார். ஆனால் பஞ்சாயத்துத் தலைவர் மட்டும் ஏதோ புரிந்து கொண்டு, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்.

"ஒன் பையனுக்கு இவங்க இலவசமாய் வைத்தியம் பார்க்கிறேன்னு சொல்றாங்க. நீ என்ன சொல்றே?"

"நாட்டு மருந்தை ஏற்கனவே கொடுத்துட்டு வர்றேன். வைத்தியரைக் கேட்டுக்கிட்டு..."

"யாரு வைத்தியரு?" "தங்கவேலுத் தாத்தா." "அந்த ஆளு வேளா வேளைக்குக் கருவாட்டுல சோறு கேப்பானே? உனக்குக் கொடுத்துக் கட்டுப்படியாகுதா?

"கட்டுப்படியா கலதான். ஆனால் அதை நெனைச்சால் பிள்ளைக்குச் சுகமாகாதே! ரெண்டு ருபாயோட, கருவாடும் பொறிச்சுச் சுடச்சுடச் சோறு போட்டுக் கொடுக்க வேண்டியிருக்கு. என் தலைவிதி:

இந்தச் சமயத்தில் இளமங்கை பொன்னாத்தாவின் அருகில் மேலும் நெருங்கிக் கொண்டு பேசினாள்.

"ஏம்மா, நீ இன்னும் புரிஞ்சுக்கலேன்னு நினைக்கிறேன். சாப்பிட்டுவிட்டுச் சாயந்தரமா வர்றோம். யோசனை பண்ணி வை. அலோபதி மருத்துவம் தேவையான்னு யோசி. சரிதானே, மிஸ்டர் வில்லன்?"