பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஒரு சத்தியத்தின் அழுகை

"திறமை வாய்ந்த வக்கீல் நீங்க, உமா. அந்தப் பொம்பளையை ஒத்துக்க வைச்சுட்டிங்களே' என்றார் டாக்டர்.

வக்கீலா, இல்லை. இல்லை. தேர்ந்த சமூக சேவகி என்றார் தொந்திக்காரர். டாக்டரிடம் குமாரி உமா அதிகமாய்ப் பேசுவதில், அவருக்கு ஆதங்கம்.

மூன்று பேரும் ஒருவர் கையை ஒருவர் குலுக்கிக்கொண்டார்கள். பஞ்சாயத்துத் தலைவரும் உறுப்பினரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

கார் பறந்தது.

பொன்னாத்தா மகனைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். முட்டைக்கும், ஹார்லிக்ஸுக்கும் எங்கே போவது? என்று புரியாமல் குமைந்தாள். இன்னும் நான்கைந்து நாளில், அவர்கள் காசு கொடுப்பார்கள் என்ற நினைப்பு, அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை. குட்டாம்பட்டியைச் சேர்ந்த பொன்னாத்தாவின் குக்கிராமம் காலையில் இருந்தே களைகட்டியிருந்தது. மாலையில் மாபெரும் விழா. சென்னையிலிருந்து இதற்கென்றே ஒரு பிரபலத் தலைவர் வந்தார். அவரை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் பலமாகச் செய்யப்பட்டன.

களை எடுக்கப் போகப் புறப்பட்ட பொன்னாத்தாவை, பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவம் வழிமறித்தார்.

"பொன்னாத்தா, எங்கேயும் போயிடாதே. ஒன் மவனுக்குப் பேரும் புகழும் வரப் போவுது. யார் கண்டா. அவனை, அந்தக் கிளப்காரங்களே படிக்க வைக்கலாம்? இன்னைக்கு வயக்காட்டுக்குப் போகவேண்டாம்."

அலங்காரப் பந்தலில், ஒலிபெருக்கி முழங்கியது. அழகான நாற்காலிகள் பின்னால் இருக்க, முன்னால் சோபாலெட் ஒன்று, கம்பீரத்துடன் காட்சி அளித்தது. குறைந்தது இருபத்தைந்து கார்கள் அங்கே வந்திருந்தன. உதட்டுச் சாய மங்கைகள், டெர்லின் பேர்வழிகள் என்று ஒரே கூட்டம். பொன்னாத்தாவும் மகனுடன் அங்கே தயாராக இருந்தாள்.

திடீரென்று வாணங்கள் வெடித்தன. மேளங்கள் ஒலித்தன. சென்னையிலிருந்து அந்தப் பிரபலத் தலைவர் வந்தார். மாலை அணிந்துகொண்டு பெருமதிப்பிற்குரிய அவர் மேடையில் அமர்ந்த.ர். சென்னைச் சங்கத்தின் பொதுச் செயலாளரான இளமங்கை உமா, ஆங்கிலத்தில் வரவேற்புரை நிகழ்த்தினாள். ஏகப்பட்ட கூட்டம்; கூட்டத்தில் கிராமவாசிகள் இருந்தார்களோ இல்லையோ, நாகரிக இளைஞர்களும் யுவதிகளும் இருந்தார்கள்.