பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொகுசுக்காரர்கள் 63

சங்கத்தின் தலைவர் மிஸ்டர் வில்லன், தலைமையுரை நிகழ்த் துகையில், தம் கிளப் எத்தனை கிராமங்களை எப்படியெல்லாம் சீர்திருத்தம் செய்திருக்கிறது என்ற அறிக்கை ஒன்றை ஆங்கிலத்தில் படித்தார். பிறகு, அந்தக் குக்கிராமத்தைச் சுவீகாரம் எடுத்திருக்கும் நோக்கத்தை எடுத்துரைத்தார். அறியாமையிலும், மூட நம்பிக்கையிலும் ஆழ்ந்திருக்கும் கிராமவாசிகளை விமரிசனம் செய்துவிட்டு, தலைவர் அவர்களைக் கிராமவாசிகளுக்கு மருத்துவ அட்டைகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

தலைவர் எழுந்தார். பத்து நிமிஷம்வரை மாலை, அணிவகுப்பு மரியாதைகள் நடந்தன. அந்தக் கிளப்பின் சேவை நாட்டுக்குத் தேவை என்று தலைவர் சொன்னதும், பட்டணத்து இளைஞர்களும் யுவதிகளும் கை தட்டினார்கள். தலைவருக்கும் உற்சாகம் தாள வில்லை. ஒரேயடியாகப் புகழ்ந்தார். நேரமாவதைப் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார். -

மருத்துவ அட்டைகள் வழங்கப்படுவதற்கு முன்னால், "அட்டையில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரும், நோயின் விவரமும் இருப்பதுடன், சங்கத்தின் டாக்டர்களே குணப்படுத்துவார்கள் என்பதையும் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தலைவர் சொன்னார். முதல் அட்டையை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது, பொன்னாத்தாவையும், அவள் இடுப்பில் இருந்த பையனையும் பஞ்சாயத்துப் பரமசிவம் மேடைக்குக் கொண்டு வந்தார். தலைவர் அவளிடம் அட்டையைக் கொடுக்கப் போன போது, உமா மைக் முன்னால் வந்து, "சாகக் கிடந்த இந்தப் பையனை நம் சங்கந்தான் காப்பாற்றியது' என்றதும், தலைவர் கைதட்ட, அதைப் பார்த்து அனைவரும் கைதட்டினார்கள். மிஸ் உமா, அந்தப் பையனுக்கு ஒரு டின் நிறையச் சாக்லெட்டுகளை வழங்கும்போது காமிரா சிரித்தது. பையனும் சிரித்தான். எல்லோரும் சிரித்தார்கள்.

விழா, இப்படியாக நடந்துகொண்டிருந்தபோது, பொன்னாத்தா யோசித்தாள். பிள்ளைக்கு மருந்து தீர்ந்துவிட்டது. மருந்து வேண்டுமே!

மிஸ் உமாவிடம், அவசர அவசரமாகப் போய் மருந்து கேட்டாள். அவளோ, 'டாக்டரைக் கேளு. நானா டாக்டர்?' என்றாள் எரிச்சலோடு. வருகை தந்திருக்கும் தலைவருடன், மற்றவர்களை முந்திக்கொண்டு, எந்தப் பக்கம் நின்றால் போட்டோவில் எடுப்பாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், இவள் மருந்து கேட்டதில் உமாவுக்கு மகாகோபம்!

ஒன்றும் புரியாத பொன்னாத்தா, டாக்டரிடம் போனாள். அவரோ 'நன்றியுரை எழுதிக்கொண்டிருந்தார். சரளமாக வார்த்தைகள் வராமல் திண்டாடும் நேரத்தில் இவளா?