பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியாயம்

தபால்காரர், சைக்கிளில் இருந்து இறங்காமலே, லாவகமாக அந்தக் கடிதத்தை வீசியெறிந்தபோது, மாடக் கண்ணுவின் மளிகைக் கடை, படுவேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. கடைப் பையன்கள், சரக்குகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கல்லாவில் உட்கார்ந்து ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தான் மாடக்கண்ணு வியாபார டெக்னிக் தெரிந்தவன் அவன். முண்டியடித்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், பொறுமை இழந்து வேறு கடைக் குப் போக முடியாதபடி முதலிலேயே, அவர்களிடமிருந்து ரூபாய்களை வாங்கிப் போட்டுவிட்டான். இனிமேல் சரக்குகளை சாவகாசமாகக் கொடுக்கலாம்,

கடிதத்தைப் பிரித்துப் படித்த மாடக்கண்ணு கொதித்துப் போனான். கடையை ஒட்டினாற்போல் இருந்த ஸ்டுலில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அறுபதைத் தாண்டிய ஐயாசாமியைப் பார்த்து, "பாத்திங்களா.. மாமா... இந்த பெருமாள் பயல் பண்ணியிருக்கிற அக்கிரமத்தை... வயசுப் பொண்ணு என்கிறதையும் மறந்துட்டு..."

அனுபவப்பட்ட ஐயாசாமி, அவனைக் கண்களால் அடக்கி விட்டு, வெளியே வரச் சொன்னார். இருவரும், ஒர் ஒரத்தில் நின்று கொண்டார்கள். சென்னையில் வேலை ப்ார்க்கும் டாக்டர் மகனைப் பார்த்துவிட்டுப் போக வந்திருக்கும் அவர், மாடக்கண்ணுவை, கடிதத்தை உரக்கப் படிக்கும்படிச் சொன்னார். அவன் உரக்கப் படித்தான். - "அன்பும் ஆசையும், பாசமும் பட்சமும் நிறைந்த சிரஞ்சீவி மகன் மாடக்கண்ணுக்கு, நானாகிய உன் அம்மா தர்மம்மாள் - மேலத்தெரு, முத்துலட்சுமி மூலம் எழுதும், சுகசேமக்கடிதம் என்னவென்றால், இங்கு, எல்லாம் வல்ல காத்தவராயன் கிருபையால் நானும், அன்னக்கிளியும் செல்லத்துரை, சீமைத்துரையும், உன் பெரியப்பா, பெரியம்மை, பிள்ளைகள்; சாமி, கருப்பன், லட்சுமனன், சரோஜா, செல்லக்கிளியும், உன் சித்தப்பா, சித்தி பிள்ளைகளும், இன்னும்