பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியாயம் 71

பின்குறிப்பு:

புலவர் புனிதவதி நல்ல பெண். அறிவாளி. உன் நண்பர்களை விசாரித்து, அங்கு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பணி கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு வா. இதற்காக, நீ இரண்டு நாள் தாமதமாக வந்தாலும் பாதகமில்லை.

அன்னை, த - அ.

மாடக்கண்ணு சிரமப்பட்டுக் கடிதத்தைப் படித்து முடித்தான். ஐயாசாமியும், கஷ்டப்பட்டு விவகாரத்தைப் புரிந்து கொண்டார். சிறிது மெளனம் சாதித்த மாடக்கண்ணு, பிறகு "பாருங்க மாமா... அநியாயத்தை... என் தம்பி. அத்தை மகள் கெட்டுப் போயிடக் கூடாதே என்கிறதுக்காக கண்டிச்சிருக்கான். எவ்வளவு திமிரு இருந்தால் இதைப் புருஞ்சிக்காம, அவங்க எங்க நடைவாசல்ல வந்து திட்டியிருப்பாங்க... நான் ஊருக்குப் போயி ரெண்டுலே ஒண்ணு பார்த்துட்டு வந்துடறேன்..."

மாடக் கண் ணு முன்னை விட அதிகமாகக் கொதித்துப் போயிருப்பதைப் பார்த்து முதலில், ஐயாசாமி ஆச்சரியப்பட்டார். பிறகு சிறிதுநேரம் மெளனியானார். அதற்குப் பிறகு வயிறு குலுங்கச் சிரித்தார்.

"ஏன் மாமா சிரிக்கிறீரு...?"

"மாடக்கண்ணு. இந்த மனசு இருக்கே... அது ஒரு செம்மறி ஆடு. எதை எதை நியாயமாக்கணும்னு நினைக்கிறோமோ, அது அதை நியாயந்தான்னு நம்மள நம்ப வைக்கிறதுக்கு, ஆயிரங் காரணங்களை ஜோடிக்கும்... முந்தாநாளு, அன்னக்கிளியை, பெருமாள் கிண்டல் பண்ணுனான் னு, அதை தப்புன்னு நியாயப்படுத்திக் கத்தினே. இப்போ அதுக்கு எதிர்மாறாய், உன் தம்பிதான், அத்தை மகளை கிண்டல் பண்ணுண் வன்னு தெரிஞ்சதும் கிண்டல் பண்ணுவதையே உன் மனசு நியாயப்படுத்தப் பாக்குது. இந்த மனசு இருக்கே... அது அவரைக் கொடி மாதிரி, எதுல படற வைக்கிறோமோ அதுல படரும்."

மாடக்கண்ணு சிறிது யோசித்தான். ஐயாசாமி சொல்வதில் அர்த்தமிருப்பது போல் தெரிந்தது. முந்தாநாள் வேறுவிதத்தில் நியாயம் பேசிய அவனின் அதே மனம், இப்போது தன்னை அறியாமலே, சிறிதும் வெட்கம் இல்லாமல் சட்டையை மாற்றிக் கொண்டது அவனுக்கு விசித்திரமாகவும், வெறுப்பாகவும் தெரிந்தது. தூக்கிய டிரங்க்' பெட்டியைத் தரையில் வைத்துக் கொண்டே, ஐயாசாமியைப் பார்த்தான். அவர் சொன்னார்: