பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஒரு சத்தியத்தின் அழுகை

செல்லம்மா, வேகமாக நடந்தாள். கிழவி, வெறித்துப் பார்த்துக்கொண்டே, மின்சாரக் கம்பத்தில் சாய்ந்ததால் ஷாக் அடித்தவள் போல் குனிந்த தலை நிமிராமல், நிமிர்ந்த முதுகு குனியாமல், கேட்டுப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தாள்.

செல்லம்மா, அந்த வாலிபனோடு சேர்ந்துகொண்டு, குடிசையைப் பார்த்து நடந்தாள். அம்மாவைத் திரும்பிப் பார்க்காமல் நடந்த அவளுக்கும் சேர்த்து, அவன் பல தடவை திரும் பிப் பார்த்துக்கொண்டே நடந்தான். சமாதி ஒன்றை ஒரு பக்கத்துச் சுவராகக் கொண்ட குடிசைக்குள் இருவரும் வந்தார்கள். செல்லம்மா, லாந்தர் விளக்கில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். நெடிய, கொடிய மெளனத்தை, அவள் தோழன் துகிலுரிந்தான்.

"செல்லம். இன்னாதான் இருந்தாலும். நீ இப்படி பேசப்படாது. அதப் பாத்தா. பாவமா கீது. தள்ளாத வயசு வேற. ஒன்னிவிட்டா... அதுக்கு யாரு கீறா?"

"இன்னாய்யா நீயும் அதோடு சேந்துக்கிற?... என்னோட... மன்சு ஒன்கு தெரிஞ்சா. இப்டி பினாத்த மாட்டே... ஒடிப்பூட்ட ஆத்தாவோட மவளுக்கு. மனசு... இன்னா பாடுபடுமுன்னு ஒன்கு தெரிய நாயமில்ல நீயே என்னிக்காவது என்ன ஓடிப்போன முண்டையோட மவளே னணு கேக்காமலா பூடுவே. நான் ஆத்தாக்காரி இருந்தும் அனாதயப் பூட்ட பாவியா..." t

செல்லம் மா வால் தன்னை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை. குலுங்கக் குலுங்க கேவிக் கேவி அழுதாள். தலையில்கூட ஒரு தடவை அடித்துக் கொண்டாள். லாந்தர் விளக்கை அப்படியே போட்டுவிட்டு, அவன் தன்னை விட்டு விடக் கூடாது என்று நினைத்தவள்போல், அவன் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முகத்தை அதில் தேய்த்துக் கொண்டு அழுதாள். இதுவரை, அவள் சிரிப்பதை மட்டும் பார்த்த அவன், ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் அவளைப் பார்த்தான். பிறகு அவள் தலைமுடியை கோதிவிட்டுக்கொண்டே 'அழாதம்மே. ஊருவுலகத்துல ஆயிரம் கீது.. அதுல. ஒண்னு உன் ஆத்தா பண் ணுனது. அதுவே இப்போ... அல்லாடுது... ஏதோ... வாலிபமிடுக்குல பூட்டு. சரி விடு. அழாதம்மே. அட" என்றான்.

"நீ ஆயிரம் சொன்னாலும் என் மனசு ஆறாதுய்யா. அப்டி இன்னாய்யா... தன்ன மீறின கொழுப்பு? நீ கூடத் தான் என்ன லேசா தொடுற... நான் இடங் குடுக்கிறனா? நீ தொட்டா ஷாக்