பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துரோகியின் விகவாசம் 79

அடிக்கத்தான் செய்யுது... அதுக்காக நானு... எப்பவாவது... கொயுப்பா... நடந்துக்கனேன்னு சொல்லு பாக்கலாம்? ஒரு வாட்டி நீ ஒவராபோனப்போ... ஒன்ன என்ன பேச்சி பேசினேன். தாலிய பூடு முன்னால தாரமா நெனக்காதன்னு அட்சி பேசினனா... இல்லியா? சொல்லுய்யா... நாயம். பேசுறிய... நாயம்..."

"செல்லம். வுலகம். நீ நெனக்கதுமாதுரி. இல்ல. அர்த்தம் காண முடியாம ஆயிரம் விஷயம் கீது.. இப்ப ஒன்னோட வயசுல கீற பல பொண்ணுங்க... பல கையிமாறிக்கலே. ஆனால், நீ கண்ணராவியாய் கீற. இதுக்கு காரணம் தெரியுமா? சொல்லும்மே."

"என்கு ஒண்ணும் ஒடல. நீயே சொல்லு." "ஒருவேள ஆத்தாவோட நீ இருந்தா, இந்த பொண்ணுங்களோட பழகுன ஜோர்ல ரெண்டு கையி மாறி போயிருப்பே."

யோல்.: "அட ஒரு பேச்சிக்குச் சொன்னேன். ஒன்னோட ஆத்தால நினைச்சி நினைச்சி அதுமாதிரி ஆவக்கூடாதுன்னு சுத்தமா இருந்துட்டே. ஒன் ஆத்தா உன்கிட்டே அடிக்கடி வந்து என்ன மாதுரி மாறிடா தடின்னு சொல்லாம சொல்லிட்டுப் பூடுது. அதனால நீ ஒயுங்கா கீறதுக்கு ஒன்னோட ஆத்தா கைமாறினதும் ஒரு காரணம். ஆத்தாவுக்கு ஒரு வகையில நீயி நன்றி சொல்லணும். பாவம் அத இப்டி குத்திக் குத்திப் பேசினதுக்கு பிரத்தியா, நீ ஒரு கத்தியாலயே குத்திப்பூட்டிருக்கலாம்..."

செல்லம்மா கண்களைத் துடைத்துக்கொண்டே யோசித்தாள். அம்மாவை பேசியதை அநியாயம் என்று ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அவ்வளவு தூரம் பேச வேண்டியது அவளுக்கு நியாயமாகவும் படவில்லை. ஆத்தாக்காரி மனசு எப்படியிருக்கும்? அவள் இப்போது எப்படி போய்க் கொண்டிருப்பாள் என்று சிறிது சிந்தித்துப் பார்த்தாள். மீண்டும் அழப் போனாள். அதற்குள் ஒரு திடீர் யோசனை, அவள் அழுகையைத் தடுத்தது. ஒரு ஈயப் போணிக்குள் இருந்த ஐம்பது பைசா நாணயத்தை எடுத்து, எதிர்கால கணவனிடம் நீட்டினாள்.

‘'எதுக்குமே?” "இத ஆத்தாவண்ட குடு. நீ சொன்னது நாயந்தான். பாவமா கீது குய்க்கா போய்யா."

"பொண்ணுங்க மனச புரியறது கஷ்டங்றது சர்தான் போல." “சீக்ரமா போய்யா. ஆத்தா பூடும்."