பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு சத்தியத்தின் அழுகை 7


இறுதிநாள் விழா!

பூச்சரங்கள் அலங்கரிக்கப்பட்ட சப்பரம், கலகநாடி அம்மன் சிலையைச் சுமந்துகொண்டு, வாண வேடிக்கை வெடிக்க, ஸெட்டு' மேளம் ஒலிக்க, “கணியான்“ ஆட, பொய்க்கால் குதிரைகள் தாவ, சப்பரம் ஒவ்வொரு கோவில் முன்பும், நின்று நிதானித்து, சேரிப்பக்கந்தான் ஊரை வலம் வர முடியும். கள்ளச் சாராயம் காய்ச்சும் சில ஹரிஜனத் தலைவர்கள் மூலமாக அவற்றைக் குடிக்கும் சில ஜாதி இந்துக்களுக்கு எட்டின செய்திகள், சர்வசாதித் தலைவர்களுக்கு எட்டியிருந்ததால், அவர்கள், ராமசாமி, மாயாண்டி போன்ற வீரர்களை கத்தி அரிவாளுடன் “சைடில்" அமர்த்தியிருந்தார்கள். சப்பரம், சேரிக்குச் சற்றே தொலைவில் உள்ள தடத்தில், பாதியைக் கடந்த போது, அங்கே இருந்த புளிய மரத்திற்கு அடியில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது அறுபது காலனி' ஆட்கள் சொல்லி வைத்ததுபோல் எழுந்து, சப்பரத்துக்கு முன்னால் வழி மறிப்பதுபோல் நின்றாலும், வழி மறிக்காதவர்கள் போல் வினயமாகப் பேசினார்கள்.

"எங்கள கோயில்லதான் சேர்க்கல. எங்க சுடலை மாடனுக்கும் கற்பூரம் காட்டிட்டுப் போகப்படாதா?”

இது, நியாயமான கோரிக்கைதான் என்று பெரும்பாலானவர்கள் நினைத்தபோது, நாடார் தலைவர் பெரியசாமி, "இது என்னடா... வழக்கமில்லாத வழக்கம்" என்று கடுமையாகக் கேட்டார். "எங்க சப்பரம் ஹரிஜன சாமிங்ககிட்ட வராது. செய்ய முடிஞ்சதைச் செய்யுங்க" என்றார் தேவர் கோன். சுடலை மாடனையே ஹரிஜனனாக்கிய வெங்கொடுமையை நினைத்து, ஜாதி இந்துக்களே தவித்த போது, கந்தசாமி பெளவ்யமாகக் குழைந்து பேசினான்.

"நீங்க கும்புடுற மாடனைத்தான் நாங்களும் கும்புடுறோம். ஹரிஜன சுடலமாடன்னு தனியா இல்ல. இது மாதிரியே மனுஷனுக்கும் மனுஷனுக்கும் வித்தியாசம் பார்க்கலாமா? எங்க பொம்புளைங்களை ஒங்களுக்குக் கட்டினால் குழந்தை பிறக்காதா? இல்லன்னா.., ஒங்க பொம்புளப் புள்ளைங்கள... எங்க ஆட்களுக்குக் கொடுத்தால் குழந்தை பிறக்காதா...?"

அவ்வளவுதான்.

"எங்க பொம்புளைங்களையாடா... கேக்குற?" என்று தேவர் தலைவர் போர் முழக்கம் செய்ய, "செறுக்கி மவனுகள அடிக்காம எதுக்குவே பேசுறியரு" என்று நாடார் தலைவர் சங்கநாதம் செய்ய, "சைடில்’ நின்ற மாயாண்டி நாடாரும், ராமசாமித் தேவரும் வேல் கம்புகள் சகிதமாகக் கூடிய இளைஞர் பட்டாளத்துடன், ஹரிஜனங்கள் மேல் பாய்ந்தார்கள். யார், யாரை அடிக்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரே கூக்குரல். பெண்களின் ஒப்பாரி. பிள்ளைகளின் ஓலம். அடிக்கும் கம்புகளின் சத்தம். அடிபட்டவர்களின் முனகல்கள். சாமியாடியும், ஆடமறந்து அல்லது