பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்மத்தின் தற்காப்பு! 89

தண்டோரா போட முடியவில்லை என்றும், தண்டோரா போடாமல் கூட்டம் கூட்டினால், மாசானத்தின் ஆதரவாளர்கள் ஒத்தி வைப்புப் பிரேரணையைக் கொண்டு வருவார்கள் என்றும், தண்டோரா போடாத கூட்டம், ஊர்க் கூட்ட சாசனத்திற்கு விரோதமானதென்றும் கூறினார். அதே சமயம், அவன், குத்திவிட்டு வந்த அரிசியில், தவிடு அதிகமாக இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

நாலைந்து நாட்கள் ஓடின. ஊர்க்காரர்கள் டிக் கடைகளிலும், கோவில்களிலும், சாவடியிலும், கூடிக் கூடிப் பேசினார்களேயன்றி ஊர்க்கூட்டம் நடைபெறவில்லை. இவ்வளவுக்கும் அன்றாடக் கூலியில் காய்ச்சும் நடராஜன், நான்கு நாட்களாக வேலைக்குப் போகாமல், கண்டவர்களின் கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியின் சுயமரியாதைக்காக, தனது சுய கெளரவத்துக்காக, பிரமுகர்கள் இட்ட பணிகளையெல்லாம் கெளரவத்தைப் பாராமல் செய்துமுடித்தான். அப்படியும் பிரமுகர்கள் அசையவில்லை.

இசக்கிமுத்துவைப் போய் மீண்டும் பார்த்தான். அவர், 'ஏய் நடராஜா நான் மாசானம் பயல நாய பேசினது மாதிரி பேசினேண்டா, அவன் சத்தியமா நான் அவள தொடலங்கறாண்டா' என்று சர்வசாதாரணமாகக் கூறிவிட்டார்.

நடராஜன் அசரவில்லை. டிபாசிட் இழப்பு ஏகாம்பரத்தைப் பார்த்தான். அவர், வீட்டுக்குள் இருந்து கொண்டே, தாம் இல்லையென்று சொல்லச் சொன்னார். அவர், பிணம் மாதிரி படுத்துக் கிடப்பதைப் பார்த்த அவன் கண்கள் அனல் கக்கின. அந்த வேகத்துடன் ம்ணியக்காரரிடம் போனான். அவர், அப்போது ரெவின்யூ இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

"முன்சீப் அய்யா, என்னோட புகார எப்ப விசாரிக்கப் போறிய?" என்று கேட்ட நடராஜனைப் பார்த்து, எரிந்து விழுந்து ஏண்டா ஒனக்கு கொஞ்சமாவது மூள இருக்கா? இடம் பொருள் ஏவல் தெரியாண்டாம்? அரசாங்க விஷயத்த பேசிக்கிட்டிருக்கோம். ஒன் விஷயந்தான் உசத்தியோ!' என்றார்.

மன்னியக்காரர், சில மணி நேரங்களுக்குப் பிறகு ரெவின்யூ இன்ஸ்பெக்டரைக் கோழியில் அடித்த பிறகு, ரெவின்யூ இன்ஸ்பெக்டருடனேயே வில் வண்டியில் ஏறிப் போய்விட்டார்.

நடராஜன் கிராமத்திலிருந்த எல்லாப் பிரமுகர்களையும் பார்த்தான். அவனிடம், அவர்கள் அனுதாபத்தோடு பதில் சொன்னார்கள். அந்த பதில்களில் சாக்குப் போக்குகள் இருந்தனவே தவிர, சாரம் இல்லை. சிலர், அவன் பின்னால் சிரிப்பது போலவும் தெரிந்தது.