உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு நாளைக்கு ஒரு நீதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை குழந்தைகள் தம் மலரும் இளம் வாழ்க்கையில் பல் வேறு பொருள்களைக் காண்கிருர்கள்; அவற்ருல் என்ன பயன் ? என்று அவர்தம் பிஞ்சு உள்ளங்கள் நினைக்கக் கூடும். பல்வேறு வகையான பொருள்கள் மக்களுக்கு நேரி டையாக உதவுவதோடு மறைமுகமாகப் பல நீதிகளேயும் சொல்லித் தருகின்றன. வள்ளுவர் போன்ற அறிஞர்கள் மக்களுக்கு அறிவுறுத்தும்போது இப்பொருள்களையும் பிராணி களையும் உவமை வாயிலாக எடுத்துக்காட்டி இருக்கிருர்கள். இந்த நூலிலே அவைகளில் ஏழு எடுத்தாளப் பெறுகின்றன. ஏழு, வாரத்தின் நாள் ஏழு' - என்று மனப்பாடஞ் செய்வர் பள்ளிப் பிள்ளைகள். அவர் வாழ்நாளே இந்த ஏழு கிழமைகளில் சுற்றிச் சுற்றி வருவது என்பது ஒரளவு அவ ருக்குப் புரிந்ததே. எனவே இந்த ஏழு நாட்களிலும் அவர் காணும் ஏழு பொருள்களை முன் வைத்து ஏழு நீதிகளே உணர்த்தினுல் அக்குழந்தைகள் உள்ளத்தே அவை பசு மரத் தாணி போலப் பதிந்து விடுமன்ருே ஆகவே அந்த அடிப்படையில் ஒரு நாளேக்கு ஒரு நீதி என்ற இந்தச் சிறு நூல் உருவாயிற்று. இளம்பிள்ளைகளுக்கு இது பெரிதும் பயன் பட்டு, அவர்தம் வாழ்வைச் செம்மைப் படுத்தும் என்ற துணி வோடு இந்த நூலே வெளியிடுகிறேன். சென்னே-30 அன்புள்ள, 10–4—60 9ئے|- )U( • لَا .