பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, முதலில் நிற்கும் ஆட்டக்காரர் இடுப்பில் கைவைத்தவாறு ஓடிச் சென்று கம்பு பிடித்தவர்களுக்கு அருகில் சென்றதும் பின்புறமாகத் திரும்பிக் கொண்டு கம்பிற்குக் கீழாகக் குனிந்து சென்று பிறகு முன்புறமாக தன் குழுவை நோக்கி ஓடி வர வேண்டும். வந்து தனக்கு அடுத்தவரைத் தொட்டுவிட்டு குழுவில் பின்னேபோய் நிற்க வேண்டும். அடுத்துவரும் முன் ஆட்டக்காரர் போல் ஓடி முடிக்க, இவ்வாறு ஆட்டம் தொடரும்.

கடைசி ஆட்டக்காரர்களில் யார் முதலாவதாக ஓடி வருகிறாரோ அவரது குழுவே வென்றதாகும்.

குறிப்பு: மேலே கூறிய ஆட்டங்கள் அனைத்தும் எட்டாம் வகுப்புக்கு உரிய ஆட்டங்களாகும்.

66. விரட்டும் இரட்டையர்

(Last couple out)

ஆட்ட அமைப்பு: விளையாட இருக்கும் ஆட்டக்காரர்களை முதலில் இருவர் இருவராகப் பிரித்துக் கொண்டு விட வேண்டும். ஒரு இரட்டையரை கைகளைக் கோர்த்துக் கொண்டு தனியாக நிற்கச் செய்த பிறகு, மற்ற இரட்டையர்களை ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நிற்கச் செய்ய வேண்டும். எத்தனை இரட்டையர் 15 அடி தூரத்திற்கு முன்னே போய், பின்னால் இருப்பவர்களுக்கு முதுகுப்புறம் தெரிவதுபோல் (Back) நிற்க வேண்டும்.

ஆடும் முறை: ஆடத் தொடங்கலாம் என்று விசில் ஒலி மூலம் அனுமதி கிடைத்தவுடன், தனியாக நிற்கும் இரட்டையர், கடைசி ஜோடி ஓடுங்கள் என்று கத்த வேண்டும்.