பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

99


கடைசியில் கைகோர்த்தவாறு நின்று கொண்டிருக்கும் இரட்டையர் இருவரும், அணியின் வலப்புறமாக ஒருவர், இடப்புறமாக இருவர் என்று தனித்து நிற்கும் இரட்டையர் நிற்கும் பக்கமாக ஓட வேண்டும்.

தனித்த இரட்டையர்கள் பிரிந்து ஓடிவரும் இரட்டையர் இருவரும், தங்கள் அருகில் வந்தவுடன் விரட்டித் தொட முயல வேண்டும். முன்னரே ஒரு குறிப்பிட்டுள்ள இடத்தைப் பிரிந்த இரட்டையர்கள் சேர்ந்து கைகோர்த்துக் கொள்வதற்கு முன்பு, தனித்த இரட்டையர் இருவரில் யாராவது ஒருவரைத் தொட வேண்டும். தொடப்படாமல் இருவரும் சேர்ந்து விட்டால், அவர்களுக்கு வெற்றி, மீண்டும் அதேபோல் இன்னொரு இரட்டையரை ஓடச் செய்து விரட்ட வேண்டும்.

யாராவது ஒருவர் தொடப்பட்டுவிட்டால், தொடப் பட்டவர் இன்னொருவருடன் சேர்ந்து கொண்டு, விரட்டும் இரட்டையராகிவிடுவார். தொட்டவர் மற்றவருடன் சேர்ந்து முதலில் நிற்கும் இரட்டையராகி வந்து நிற்க, ஆட்டம் மீண்டும் முன்போல் தொடரும்.

67. குதித்தால் தொடாதே

(Jump Tag)

ஆட்ட அமைப்பு: இது சாதாரண விரட்டித் தொடும் ஆட்டத்தைப் போல்தான் (Tag) ஒரு குறிப்பிட்ட எல்லையை முதலில் போட்டு வைத்துக் கொண்டு, ஆட்டக்காரர்கள் அனைவரையும் அந்த எல்லைக்குள் (Area) நிற்கச் செய்ய வேண்டும். அவர்களில் ஒருவர் விரட்டுபவராக (it) இருப்பார்.