பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, ஆட்டம் தொடங்குகிறது. விரட்டுபவர் மற்றவர்களை விரட்டித் தொட முயற்சிப்பார். விரட்டுபவர் தன் அருகில் வந்தவுடன், அந்த ஆட்டக்காரர் தன் இரு கால்களையும் சேர்ந்தாற்போல் சேர்த்து நின்று தரையில் ஊன்றி மேலே தாவிக் குதித்துக் கொண்டே (அதே இடத்தில்) நிற்க வேண்டும்.

அதுபோல குதிக்காதவர் தொடப்பட்டால், அவரே, அடுத்த விரட்டுபவராக மாற ஆட்டம் தொடரும்.

குறிப்பு: ஒருவர் குதிக்கிறார் என்றால், விரட்டுபவர் அவர் அருகிலேயே நின்று கொண்டிருக்கக் கூடாது உடனே வேறொருவரை விரட்ட வேண்டும்.