பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

101


68. முதுகும் முதுகும்

(Back to Back Tag)

ஆட்ட அமைப்பு: இது சாதாரண விரட்டித் தொடும் ஆட்டம் போல இருந்தாலும், சற்று வித்தியாசமாக விளங்குகின்ற ஆட்டமாகும்.

இருக்கின்ற ஆட்டக்காரர்கள் அனைவரையும் இருவர் இருவராகப் பிரிக்க வேண்டும். அவர்கள் இப்போது இரட்டையராக ஆகிவிடுகிறார்கள். விரட்டித் தொட என்று ஒரு இரட்டையரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

விளையாடுவதற்கென்று ஒரு சதுரம் அமைத்து, ஆடும் எல்லையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். எல்லைக்கு வெளியே யாரும் போகக் கூடாது.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, கைகளைத் தட்டி விரட்டும் இரட்டையர் மற்றவரைத் தொட ஓடி வருவார்கள். தப்பி ஓடும் இரட்டையர், தங்கள் முதுகுக்கு முதுகு வைத்து, கைகளைக் கோர்த்தவாறு முதுகின் மேலே ஒருவரை தூக்கிக் கொள்ள வேண்டும். தூக்கிக் கொண்டு நிற்பவரை விரட்டும் இரட்டையர் தொட முடியாது.

இந்த ஆட்டமுறை கடினமானதாக இருந்தால், தொட வருபவர்களிடமிருந்து தப்பிக்க, இரட்டையர் முதுகோடு முதுகாக ஒட்டி நின்று கைகளைக் கோர்த்துக் கொண்டு விறைப்பாக நின்று கொண்டால் கூட போதும் என்றும் ஆடலாம்.

இதே ஆட்டத்தை இன்னொரு முறையாகவும் ஆடலாம்.