பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


நேரம் நீடிக்கும். 5 நிமிடத்திற்குப் பிறகு, அதிகமான கரளாக்கட்டைகளைக் கொண்டு வந்திருக்கும் குழுவே, வெற்றி பெற்ற குழுவாகும்.

இந்த ஆட்டத்தையே French and English என்று கூறுவார்கள்.

72. மூலைக்கொரு தலைவர்

(Corner spy)

ஆட்ட அமைப்பு: 40 லிருந்து 60 மாணவர்கள் வரை இந்த ஆட்டத்தில் பங்கு பெறலாம். சம எண்ணிக்கை உள்ளவாறு ஆட்டக்காரர்களை 4 குழுவினர்களாகப் பிரித்து, 4மூலைகளிலிருந்தும் (பின்னோக்கி) வரிசையாக நிறுத்தி வைக்க வேண்டும்.

நான்கு குழுவினரும் இப்போது சதுரத்தின் மையத்தைப் பார்க்கும் வண்ணம் நிறுத்தப்பட்டிருக்கின் றார்கள். ஒவ்வொரு குழுவின் தலைவனும், தங்கள் கையில் உள்ள பந்துடன், மையத்தில் வந்து நின்று, தங்கள் குழுவைப் பார்க்கும் வண்ணம் நிற்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, ஆட்டம் தொடங்குகிறது. பந்தை வைத்திருக்கும் குழுத்தலைவன் தன் குழுவில் முதல் ஆட்டக்காரரிடம் பந்தை எறிய, பந்தைப்பிடித்த ஆட்டக்காரர் திரும்பவும் ஓரடி நகர்ந்து நிற்க, இரண்டாம் ஆட்டக்காரர் அவரிடம் வந்து நின்றவுடன், குழுத் தலைவன் அவரிடம் பந்தை எறிய, பந்தைப் பிடித்த உடனே திரும்பவும் குழுத்தலைவனிடம் எறிந்துவிட்டு அவர் அடுத்தவர் பின்னே போய் நிற்க, இவ்வாறு கடைசியில் நிற்கும் ஆட்டக்காரரிடம் பந்தை குழுத் தலைவன் எறிந்தவுடன், பந்தைப் பிடித்த