பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

109


வேண்டும். கடைக்கோட்டிலிருந்து 2 அடி தூரத்தில் (2) இருபுறமும் ஒவ்வொரு இடைக்கோடு போட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு கடைக்கோட்டிலும் (3) ஆறு கரளா கட்டைகள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவிற்கும் 12 ஆட்டக்காரர்கள் என்று இரண்டு குழுவைப் பிரித்து, அதில் தாக்கும் குழு, தடுக்கும் குழு என்று குறித்துக் கொண்டு விட வேண்டும்.

தாக்கும் குழு 12 பேர்களையும், 6 பேர் என்று இரு குழுவாகப் பிரித்து 1 என்று குறித்துள்ள நடுக்கோட்டின் இருபுறமும் நிறுத்த வேண்டும்.

தடுக்கும் குழு 12 பேர்களையும் 6, 6 பேராக இடைக்கோடு என்னும் இடத்தில் வரிசையாக நிறுத்தி வைக்க வேண்டும்.

ஆடும் முறை: நடுக்கோட்டின் இருபுறமும் நிற்கின்ற தாக்கும் குழுவைச் சேர்ந்த 12 பேர்களிடமும் (ஆளுக் கொரு பந்து வீதம்) 12 பந்துகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். -

அவர்களுக்கு எதிரே இருக்கும் 6 கரளாக் கட்டைகளை விசில் ஒலிக்குப் பிறகு அடித்துத் தாக்க முயல வேண்டும். இடைக்கோட்டில் இருக்கும் தடுத்தாடுவோர் தாங்கள் காத்து நிற்கும் கரளா கட்டைகள் கீழே விழுந்துவிடாமல் தடுத்துக் காத்துக் கொள்ள வேண்டும். தடுத்தாடுபவர்கள், தாங்கள் தேக்கிய பந்துகளை மீண்டும் தாக்குவோரிடம் கொடுத்துவிட வேண்டும். இவ்வாறு தாக்குவோர் தடுப்போர் இடையே 5 நிமிடம் கடும் போட்டி மாறி மாறி நடக்கும். 5 நிமிடத்திற்குப்