பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

111


76. சாரட்டு ஒட்டம் (Chariot Race)

ஆட்ட அமைப்பு: முதலில், ஆட்டக்காரர்களை4 சம எண்ணிக்கையுள்ள குழுவினராகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவையும் நான்கு நான்கு பேர்களாக சேர்த்து நிறுத்தி வைக்க வேண்டும். அந்த நால்வரில், பின்னர் முதலாவதாக நிற்பவர்தோளின்மீது கையை வைத்துநிற்க, அதேபோல் மற்றவர்களும் நின்று சாரட்டு வண்டித் தொடர்போல் நிற்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவும் இவ்வாறு அமைத்துக் கொண்ட பிறகு, ஒடத் தொடங்கும் கோட்டின் பின்னே தயாராக நிற்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, முதல் நான்கு பேர்கள் அடங்கிய சாரட்டு வண்டி 50 அடி தூரத்திற்கு அப்பால் உள்ள எல்லையைக் கடந்து சென்று மீண்டும் திரும்பி வந்து தங்களுக்கு அடுத்த சாரட்டுத் தொடரை அனுப்ப வேண்டும்.