பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


இவ்வாறு தொடராக ஓடி, எந்தக் குழு முதலில் ஒடி வருகிறதோ அதுவே வென்றதாகும். - *

குறிப்பு: தோளில் கை போடாமல், இடுப்பைப் பிடித்துக் கொள்ளலாம், தங்களது முன்னால் நிற்பவர் பின்புறம் கைநீட்டிட, பின்னால் நிற்பவர் அதனைப் பிடித்துக் கொள்ள என்று இருவர் இருவராகக் கூட ஒடி ஆடலாம். -

77. மேலும் கீழும் (Over and Under Relay)

ஆட்ட அமைப்பு: ஆட இருக்கும் மாணவர்களை நான்கு குழுவினராக, சம எண்ணிக்கை அளவில் முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும். எல்லாத் தொடரோட்டங் களுக்கும் (Relays) நிற்க வைப்பது போல, ஒடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால் ஒவ்வொரு குழுவையும் வரிசை வரிசையாக நிறுத்தி வைக்க வேண்டும். எதிரே30அடிதுரத்தில் ஒடித் தொடும் கோடு ஒன்றையும் போட்டு வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் முதலில் நிற்கும் ஆட்டக் காரரிடம் ஒரு பந்தைக் கொடுத்து வைத்திருக்க ஆட்டம் தொடங்கும். -

ஆடும் முறை; ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிறகு, பந்தை வைத்திருக்கும் முதல் ஆட்டக்காரர், தன்தலைக்கு மேலாகப் பந்தை தன் பின்னால் நிற்பவரிடம் தர, அதை வாங்கி, அவர் தன் கால்களுக்கிடையே தனக்குட் பின்புறத்தில் உள்ளவரிடம் தர, கால்களுக்கிடையே பந்தைப் பெற்றவர் தன் தலைக்கு மேலாகத் தனக்குப் பின்னால் இருப்பவரிடம் பந்தைத் தர, இவ்வாறு ஒருவ