பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

113


மாற்றி ஒருவர் தலைக்கு மேலும், கால்களுக்கு இடை யிலும் என்று அந்தப் பந்தை வாங்கி, வழங்கி அனுப்ப வேண்டும்.

குழுவின் கடைசியில் நிற்பவரிடம் பந்து வந்தவுடன், அவர் பந்தை எடுத்துக் கொண்டு, ஒடித் தொடும் கோடு வரை ஒடிச்சென்று, அதனைக் கடந்து திரும்பி வந்து, தன் குழுவின் முதலில் நின்று, தலைக்கு மேலாகத் தன் பின் நிற்பவரிடம் பந்தைத் தர, அவர் பந்தை வாங்கித் தன் கால்களுக்கு இடையே கீழாகப் பந்தை அனுப்ப இவ்வாறு ஆட்டம் தொடரும். -

மேலே விளக்கம் தந்தவாறு, எந்தக் குழுவின் கடைசி ஆட்டக்காரர் ஓடி முதலில் ஒடி வந்து முடிக்கிறாரோ, அவரது குழுவே வென்றதாகும்.

குறிப்பு: தங்கள் தங்கள் தலைக்கு மேலாகவும், கால்களுக்கிடையே கீழாகவும் ஒருவர் மாற்றி ஒருவர் (Alternate) என்று பந்தை மாற்றி அனுப்ப வேண்டும்.