பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

115


ஒருவர் மாற்றி ஒருவர் நிற்பது என்பது, 20 ஆட்டக்காரர்கள் மொத்தம் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 நம்பர் உள்ள ஆட்டக்கார்கள் ஒரு குழு, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 மற்றொரு குழு, இவர்களுக்குள் பந்தை மாற்றிக் கொண்டு ஆடி அனுப்புதல்தான் ஆடும் முறையாகும்.

யார் பந்தைத் தவறி கீழே விடுகின்றாரோ, அவரேதான் பந்தை எடுத்து வந்து மீண்டும் ஆட்டத்தைத் தொடர வேண்டும்.

79. குதிரைப் பந்தாட்டம்

(Mount Ball Tag)

ஆட்ட அமைப்பு: ஆட்டக்காரர்களை இருவர் இருவராகப் பிரித்து நிற்கச் செய்து, அவர்களில் ஒருவரைக் குதிரையாகவும் (Horse) மற்றொருவரை குதிரை வீரனாகவும் (Rider) இருக்குமாறு முன்கூட்டியே அறிவித்துவிட வேண்டும்.

20 அடி விட்டமுள்ள வட்டம் ஒன்றைப் போட்டு, அந்த வட்டக் கோட்டின் மேல், குதிரை வீரர்களை நிற்கச் செய்ய வேண்டும். (அதாவது ஒருவர் முதுகின்மேல் மற்றவர் அமர்ந்திருத்தல்)

குதிரை வீரர்களாக இருப்பவர்கள் பார்த்துக் கொண்டு நிற்பது ஆட்டமல்ல. தன்மேல் இருப்பவருக்கு ஒருவர் பந்தெறிந்தால், அவருக்குப் பந்து கைக்கு எட்டாதவாறு செய்வதுதான் குதிரையாக இருப்பவருக்குரிய ஆட்ட மாகும். அதாவது தான் நின்று கொண்டிருக்கும் தன்மையிலேயே கால்களை சிறிதும் நகர்த்தாமல் கீழே