பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


81. பந்தனுப்பும் போட்டி

(Ball pass and team running)

ஆட்ட அமைப்பு: ஆட்டத்திற்கு 20 மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, குழுவிற்கு 10 ஆட்டக்காரர்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

முதல் குழுவை ‘ஆ’ என்றும், இரண்டாம் குழுவை ‘ஓ’ குழு என்றும் பெயர் கொடுத்துவிட வேண்டும்.

‘ஓ’ குழுவை படத்தில் காட்டியபடி வரிசையாக நிறுத்திவிட்டு ‘ஆ’ குழுவைப் படத்தில் காட்டியவாறு 10 அடி இடைவெளி இருப்பதுபோல நிறுத்தி வைக்க வேண்டும். (1-க்கும் 2-க்கும் இடையில் 10 அடி தூரம்) அதேபோல் 3-4, 5-6, 7-8, 9-10,க்கும் இருக்க வேண்டும். ‘ஆ’ குழுவின் 1-வது ஆட்டக்காரரிடம் பந்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

ஆடும் முறை; ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிறகு, 1-ம் ஆட்டக்காரர்.2-ம் ஆட்டக்காரருக்குப் பந்தை எறிய, 2-3, 3-4, 4-5, 5-6, 6-7, 7-8, 8-9, 9-10 என்று பந்தை எறிய வேண்டும். அதே நேரத்தில், விசில் ஒலிக்குப் பிறகு ‘ஓ’ குழுவினர் வரிசையாக அம்புக் குறியிடப்பட்டிருக்கும் திசையாக வேகமாக ஆ’ குழுவைச்சுற்றி ஓடி வருவார்கள். ‘ஓ’ குழு ஒரு சுற்று சுற்றி வருவதற்குள், ‘ஆ’ குழுவினர், எத்தனை பேருக்குப் பந்தை வெற்றிகரமாக (தவறவிடாமல்) மாற்றிக் கொண்டார்கள் என கணக்கு எடுக்கப்படும்.

அதேபோல, ‘ஓ’ குழுவினர் நின்று பந்தை எறிய, ‘ஆ’ குழுவினர் ஓடிவர, அவர்கள் எத்தனை முறை வெற்றி-