பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

119


கரமாக எத்தனை பேருக்குப் பந்தெறிவார்கள் என்பதையும் கணக்கெடுக்க வேண்டும்.

யார் அதிகமாகப் பந்தெறிந்து மாற்றி அனுப்பி இருக்கிறார்கள் என்பதை அறிந்து அதிக எண்ணிக்கையில் அனுப்பிய குழுவை வெற்றி பெற்றதென்று அறிவிக்க வேண்டும்.

82. ஓடும் நாற்காலி

(Chair Sedan Relay)

ஆட்ட அமைப்பு: 40-லிருந்து 80 மாணவர்கள் வரை இந்த ஆட்டத்திற்கு வைத்துக் கொள்ளலாம். சம எண்ணிக்கை உள்ள4 குழுவினர்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, 20 பேர் ஒரு குழுவிற்கு என்றால், அவர்கள் இருவர் இருவராகப் (pair) பிரிந்து ஓடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னே நிற்க வைக்கும்போது நிறுத்த வேண்டும்.