பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

121


83. தடி தாண்டும் தொடரோட்டம்

(Jump the stick relay)

ஆட்ட அமைப்பு: ஆட்டக்காரர்களை 4 சம எண்ணிக்கையுள்ள 4 குழுவினர்களாக முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும். ஓடத் தொடங்கும் கோட்டிற்கு முன்னே வரிசையாக ஒருவர் பின் ஒருவராக ஒவ்வொரு குழுவையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

ஆடும் முறை: ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிறகு ஆட்டம் தொடங்குகிறது. தடி வைத்திருக்கும் முதல் ஆட்டக்காரர் எல்லைக்கோடு வரை ஓடி விட்டுத் திரும்பி வந்து, தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தவரிடம் வந்து தடியை நீட்ட, இவர் ஒரு முனையையும் அடுத்தவர் இன்னொரு முனையையும் பிடித்துக் கொண்டு தரையிலிருந்து 6அங்குல உயரத்திற்குப்பிடித்துக் கொண்டு பின்னால் வரும் பொழுது அவரது குழுவினர் அனைவரும் அந்தத் தடியினைத் தாண்டிவிட்டு, பிறகு இருவரும் குழுவினர் கடைசி வரை வருவார்கள்.

வந்ததும் முதல் ஆட்டக்காரர் கடைசியில் நின்று கொள்ள, இரண்டாவதாக இருந்த ஆட்டக்காரர் எல்லைக்கோடு வரை தடியுடன் போய் திரும்பி வந்து மூன்றாமவரிடம் குறுந்தடியை நீட்டி, ஆளுக்கொரு முனையில் பிடித்துக் கொண்டு முன்போல் ஆட, ஆட்டம் தொடரும்.

எல்லோருக்கும் வாய்ப்புக் கிட்டியவுடன் கடைசி ஆட்டக்காரராக இருந்தவர் முதல் ஆட்டக்காரராக ஓடி போய் ஓடத் தொடங்கும் கோட்டைக் கடந்துவிட்டால் அவரது குழுவே வென்றதாகும்.

குறிப்பு: மேலே உள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஒன்பதாம் வகுப்பிற்குரிய ஆட்டங்களாகும்.