பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


84. சங்கிலித் தொடர் ஆட்டம்

(Clasp Tag)

ஆட்ட அமைப்பு: இருக்கின்ற மைதானம் முழு வதையும் இந்த விளையாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். விளையாட வருகின்ற மாணவர்கள் அனைவரையும் விளையாட்டிற்குச் சேர்த்துக் கொள்ளலாம். -

ஆட்டக்காரர்களில் ஒருவரை விரட்டித் தொடுபவராக (it) நியமித்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

ஆடும் முறை: ஆசிரியரின் அனுமதிக்குப் பிறகு, விரட்டித் தொடுபவர் விரட்டி, மற்றவர்களைத் தொட முயற்சிக்க வேண்டும். தொடப்பட்டவர் ஆட்டத்தை விட்டு வெளியேறாமல், விரட்டித் தொடுபவரின் இடுப்பைப் பின்புறத்திலிருந்து பற்றிப் பிடித்துக்