பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

123


கொண்டு இருவராக மாறி மற்றவர்களைத் தொட வேண்டும்.

முதலில் இருப்பவர்தான் மற்றவர்களைத் தொட வேண்டும். தொடர்ந்து தொடப்படுகின்றவர்கள் உடனே வந்து விரட்டித் தொடுபவரைப் பிடித்து இருப்பவரின் இடுப்பைப் பற்றிக்கொண்டு, சங்கிலியைப் போல் அமைப்பினை உண்டாக்கி, எல்லோரும் ஒரேசங்கிலியாக இருந்து ஓடி விரட்ட ஆட்டம் இவ்வாறு தொடரும்.

குறிப்பு: சங்கிலியை அறுத்துக் கொண்டு மற்றவர்களைத் தொட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விரட்டித் தொடுபவரின் பின்னால் நிற்பவர்கள் விரட்டித் தொடுபவரை விடாமலும், அனுசரித்தும் ஓட வேண்டும்.

விரட்டித் தொடுபவரும், தான் போகும் திசையையும் மற்றும் வழியையும் கூறி, அவர்களை அதிகம் குழப்பிவிடாமல் கூடவே ஓடி வருமாறு செய்ய வேண்டும்.

85. மாற்றும் ஆட்டம்

(Change the club)

ஆட்ட அமைப்பு: சம எண்ணிக்கையுள்ள இரண்டு குழுவாக இருக்கும் ஆட்டக்காரர்களை முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும்.

20 மீட்டர் இடைவெளி இருப்பது போல் இரண்டு நேர்கோடுகளைப் போட்டு, அதன் மையத்தில் அதாவது 10 மீட்டரில் 10 அடி விட்டமுள்ள வட்டமும்bஅதன் இருபுறமும் 5அடி விட்டமுள்ள இரு வட்டங்களையும் போட்டு வைக்க வேண்டும். அதன் அமைப்பு கீழே