பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


காண்பித்தவாறு இருக்க வேண்டும். நடுவில் உள்ளது பெரிய வட்டம் பக்கவாட்டில் உள்ளவை இரு சிறு வட்டங்கள்.

ஒரு கோட்டில் ஒரு குழுவும், இன்னொரு கோட்டில் மற்றொரு குழுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருப்பது போல் நிற்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண் (Number) கொடுத்து விட்டு பெரிய வட்டத்தின் நடுவில் 6 கரளாகட்டைகளை (Indian Clubs) வைத்துவிட வேண்டும்.

ஆடும் முறை: ஆசிரியர் வட்டங்களுக்கு அப்பால் (நேராக) நின்றுகொண்டு 10 என்ற எண்ணைக் கூப்பிடு வார். உடனே இரண்டு குழுக்களிலும் 10 என்ற எண் கொண்ட ஆட்டக்காரர்கள் இருவரும் உடனே மைய வட்டத்தை நோக்கி ஓடி வந்து, முதல் மூன்று கரளாகட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, அருகில் உள்ள சிறிய வட்டத்தில் வைத்த பிறகு, இன்னொன்றை எடுத்து வந்து சிறிய வட்டத்தில் வைத்து, அதாவது ஒவ்வொன்றாக இவ்வாறு மூன்று கரளாக்கட்டைகளையும் சிறிய வட்டத்தில் வைத்துவிட்டு, தன் பகுதிக்கு வந்துவிட வேண்டும்.

இவ்வாறு முதலில் வைத்துவிட்டு யார் தனது குழு நிற்கும் கோட்டை அடைகிறாரோ அவரது குழுவிற்கு