பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஆடும் முறை: ஆசிரியரின் விசில் ஒலி அனுமதிக்குப் பிறகு, பந்தை வைத்திருப்பவர் வட்டத்தில் நிற்பவர்களைப் பார்த்து அடித்திட வேண்டும். பந்தடிபட்டவர் உடனே வட்டத்திற்கு வெளியில் வந்து மற்ற ஆட்டக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு வாய்ப்புக் கிடைக்கும் போது, வட்டத்தில் உள்ளவர்களைப் பந்தால் தாக்க வேண்டும்.

கடைசி ஒருவர் வட்டத்தில் நிற்கும் வரை ஆட்டம் தொடரும்.

குறிப்பு: எல்லோரையும் வட்டத்திற்குள் நிற்க வைத்து, ஒருவர் மட்டும் பந்துடன் வெளியில் நின்று அடித்தாடியும் ஆட்டத்தைத் தொடங்கலாம்.

வட்டத்திற்குள் சென்று பந்தால் அடித்தால், அது தவறாகும்.

87. பந்தைத் தட்டும் ஆட்டம்

(Ball Bounce Relay)

ஆட்ட அமைப்பு: ஆட்டக்காரர்களை சம எண்ணிக்கையுள்ள நான்கு குழுவினராகப் பிரித்து, ஓடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால், ஒவ்வொரு குழுவினரையும் வரிசையாக (File) நிறுத்தி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் முதலாவதாக நிற்கும் ஆட்டக்காரரிடம் ஒரு பந்தைக் கொடுத்து வைத்துவிட வேண்டும்.

குழுக்களுக்கு எதிரே 30 அடிதுரத்தில் எல்லைக்கோடு ஒன்றையும் குறித்து வைத்திருக்க வேண்டும்.

ஆடும் முறை: ஆசிரியரின் அனுமதிக்குப் பிறகு பந்தை வைத்திருக்கும் முதலாவது ஆட்டக்காரர் எல்லைக்