பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


கம்பினை தங்கள் கால்களுக்கிடையே கொண்டு வந்து பிடித்துக் கொண்டு, அதனைப் படகாகவும், தங்களைப் படகோட்டிகளாகவும் கற்பனை செய்து கொண்டு நிற்க வேண்டும். குழுவின்தலைவன், குழுவில் கடைசி ஆளாக நின்று கொண்டிருக்க வேண்டும். ... "

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, கால்களுக்கு இடையே உள்ள நீண்ட கம்பினை ஒவ்வொருவரும் கையால் பிடித்தபடி, எதிரே குறிக்கப்பட்டுள்ள 40 அடி தூரத்தில் இருக்கும் எல்லைக்கோடு வரை வந்து சேர வேண்டும்.

ஒடத் தொடங்கும் கோட்டை குழுவின் தலைவன் வந்து சேர்ந்த பிறகே, அந்தக் குழு போட்டியை முடித்ததாகக் கருதப்படும். முதலில் வந்து சேர்ந்த குழுவே வெற்றி பெற்றதாகும்.

89. சேர்ந்தாடும் ஆட்டம் (Avalanche Relay)

ஆட்ட அமைப்பு: ஆட்டக்காரர்களை 4 குழுவினர் களாகப் பிரிப்பது, முன் ஆட்டத்தில் உள்ள முறை போல்தான், ஒவ்வொரு குழுவையும் ஒடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால் நிற்கச் செய்யும்போது, ஒரு ஆட்டக்காரருக்கும் அடுத்த ஆட்டக்காரருக்கும் இடையில் 10அடி தூரம் இருப்பது போல் நிற்கச் செய்ய வேண்டும். - *

எதிரே 40 அடி தூரத்தில் எல்லைக் கோடு ஒன்றினையும் போட்டுக் குறித்து வைத்திருக்க வேண்டும்.

ஆடும் முறை:ஆட்டம் தொடங்கியவுடன், குழுவின் முன்னால் நிற்கும் முதல் ஆட்டக்காரர் பின்புறம் திரும்பி