பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஒவ்வொரு பந்து இருக்க வேண்டும். எல்லா ஆட்டக்காரர்களும் நின்று கொண்டிருக்கும் போதுதான், ஆட்டம் தொடங்குகிறது.

ஆடும் முறை: ஆசிரியரின் அனுமதி கிடைத்ததும் பந்து வைத்திருக்கும் குழுத் தலைவன், பந்தை எதிரே உள்ள தன் குழு முதல் ஆட்டக்காரருக்கு எறிய, அவர் பந்தைப் பிடித்து திரும்பவும் குழுத் தலைவனுக்கு அனுப்பியவுடன், உடனே அதே இடத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். -

பிறகு, குழுத் தலைவன் அந்தப் பந்தை இரண்டாம் ஆட்டக்காரரிடம் எறிய, அவரும் பந்தைப் பிடித்து, தலைவனுக்கு எறிந்துவிட்டு, அதே இடத்தில் அமர்ந்து கொள்ள ஆட்டம் தொடரும்.

தன் குழுவின் கடைசி ஆட்டக்காரருக்குப் பந்தை எறிந்து, அவரிடத்தில் பந்தை முதலில் பெற்று விடுகின்ற குழுத்தலைவனையே வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.

குறிப்பு: முதலில் பந்தை வெற்றிகரமாக மாற்றித் தன்னிடம் பெற்று விடுகின்ற குழுத் தலைவன், உடனே

பந்தைத்தலைக்கு மேல் உயர்த்திக் காட்டிவிட வேண்டும்.

91. பாம்பாட்டம்

(Snake Relay)

ஆட்ட அமைப்பு: முன் ஆட்டம் போல்தான்.

4 குழுவினரையும் ஓடத் தொடங்கும் கோட்டிற்குப் பின்னால் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் எதிரே 10அடியில் இருந்து தொடங்கி, 10அடி