பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

131


இடைவெளிக்கு ஒன்றாக, 5 அல்லது 8 இந்திய கரளாக் கட்டைகளை (Indian Clubs) நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.

ஆடும் முறை: ஆட்டம் தொடங்கியவுடன், முதலில் நிற்கும் ஆட்டக்காரர், நிறுத்தப்பட்டிருக்கும் கரளா கட்டைகளுக்கிடையேயுள்ள இடைவெளியில் வளைந்து வளைந்து மாறி மாறி (Zig Zag) ஓடி, கடைசி கரளாக் கட்டையைக் கடந்ததும், பின்புறமாகவே (Backward) அதேபோல் திரும்பி ஓடிவந்து, தனக்கு அடுத்து நிற்கும் இரண்டாவது ஆட்டக்காரரைத் தொட, அவர் முன் ஆட்டக்காரர் போல ஓடித்திரும்பி வர ஆட்டம் தொடரும்.

கரளாக் கட்டைகள் விழுந்து விடுமாறு இடித்துத் தள்ளிவிட்டு ஓடக் கூடாது. எச்சரிக்கையாக ஓடித் திரும்ப வேண்டும். தள்ளிவிட்டால், எடுத்து வைத்துவிட்டுத்தான் வர வேண்டும்.

முதலில் ஓடி முடித்து விடுகிற குழுவே வென்றதாகும்.