பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்



92. ஒற்றைக்கால் ஓட்டம்

(Hopping Tag)

ஆட்ட அமைப்பு: ஆட்டத்தில் பங்கு பெறும் ஆட்டக்காரர்களை 4 குழுவினராகப் பிரித்து, ஓடத் தொடங்கும் கோட்டின் பின்புறத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். எதிரே 30 அடிதுரத்தில் எல்லைக் கோடு ஒன்றையும் போட்டுக் குறித்து வைத்திருக்க வேண்டும்.

வட்டம் இல்லாத ஒருவரை விரட்டித் தொடுபவராக (it) நியமித்து, வட்டத்தின் மையத்தில் நிற்குமாறு செய்ய வேண்டும்.

ஆடும் முறை: வட்டத்தின் மையத்தில் நிற்பவர் எல்லோரும் மாறுங்கள் என்று சத்தமாகக் கூற வேண்டும். உடனே சிறு சிறு வட்டத்தில் நிற்பவர்கள், தங்கள் வட்டத்தை விட்டு மாறி, வேறொரு வட்டத்திற்குள் ஓடிப்போய் நின்று கொள்ள வேண்டும்.

அவர்கள் வட்டம் தேடும்பொழுது, சத்தம் போட்ட வரும் ஓடிப்போய் ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும். யாருக்கு வட்டம் கிடைக்கவில்லையோ, அவர் சத்தம் போடுபவராக வட்டத்தின் மையத்தில் போய் நின்று முன்போல் ஆணையிட, ஆட்டம் தொடரும்.

93. எல்லோரும் மாறுங்கள்

(All Change)

ஆட்ட அமைப்பு: முதலில் 30 அடி விட்டமுள்ள வட்டம் ஒன்றைப் போட வேண்டும். எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்கின்றார்களோ, அத்தனை பேர்களும் நிற்பது போல, வட்டத்தைச்சுற்றி, சிறு சிறு வட்டங்கள் போட்டு,