பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


வேடிக்கையான பதில்களைக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு கேள்வியின்போது நள்ளிரவு என்று கூறிவிட்டால்,உடனேவட்டம் சுற்றிநின்றவர்கள் அனைவரும் தங்களது பழைய இடமாகிய ஓடத் தொடங்கும் கோட்டுக்கு ஓடி வந்துவிட வேண்டும்.

அந்தக் கோட்டினை அடைவதற்குள் வட்டத்துள் நின்றவர் விரட்டி வந்து யாரையாவது தொட்டுவிட்டால்,அவர் வட்டத்துள் நிற்பவராக மாற, மீண்டும் ஆட்டம் தொடங்கும்.

97. கோழிச் சண்டை

(Cock Fighting)

ஆட்ட அமைப்பு: 8 அடி விட்டமுள்ள வட்டம் ஒன்றைப் போட்டுக் கொண்டு,எல்லா ஆட்டக்காரர்களையும் அதில் நிற்கச் செய்ய வேண்டும். (ஆட்டக் காரர்கள் சம வயதும், ஒத்த உடல் எடை உள்ளவர்களாகவும் இருப்பது போல் தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது.)

ஆடும் முறை: ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிறகு, எல்லோரும் ஒற்றைக் காலை பின்புறமாக மடித்து வைத்து ஒரு காலில் நின்றுகொண்டு, மற்றவர்களை இடித்துத் தள்ள வேண்டும்.

இரு காலையும் ஊன்றியவர்கள் அல்லது வட்டத்திற்கு வெளியே தள்ளப்பட்டதால் சென்றவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

குறிப்பு: தோள்களினாலேதான் இடிக்க வேண்டும். தோள்புறத்தில் (Shoulder Level) தான் இடித்துத் தள்ள