பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


விரட்டித் தொடும் ஆட்டக்காரராக மாறிட ஆட்டம் தொடரும்.

முதலாம் விரட்டித் தொடுபவர்,உடலில் எந்தப் பாகத்தினைத் தொட்டு மற்றவரைப் பிடித்தாரோ, அந்த இடம்தான் தொடுபவதற்குரிய இடம். உதாரணம்,தோள்பகுதி,அடுத்த ஆட்டக்காரரும் மற்றவரின் தோளைத் தொட்டால்தான் அது ஏற்றுக் கொள்ளப்படும்.வேறு பகுதியைத் தொட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இவ்வாறு,தொடர்ந்து ஆட்டம் நடைபெறும்.

100. கங்காரு ஒட்டம்

(Kangaroo Ball)

ஆட்ட அமைப்பு: ஆட்டக்காரர்களை 4 குழுக்களாகப் பிரித்து,ஒடத் தொடங்கும் கோட்டின் பின் வரிசையாக நிறுத்தி,அவர்களுக்கு எதிரே20அடிதுரத்தில் எல்லைக்கோடு ஒன்றையும் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

குழுவின் முதலில் நிற்பவர்கள் கையில் ஒவ்வொரு பந்தினைத் தந்திருக்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பின் பந்தை வைத்திருப்பவர்,தனது முழங்கால்களுக்கிடையில் பந்தை வைத்துக்கொண்டு தவறி விழ விடாமல் எல்லைக்கோடு வரை கொண்டு சென்று (Hoo), திரும்பி வந்து தனக்கு அடுத்து நிற்கும் இரண்டாவது ஆட்டக் காரரிடம் தர,இவ்வாறு ஆட்டம் தொடரும்.

முதலில் முடிக்கின்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.