பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


3. நொண்டி ஆட்டம் (Lame Tag)

பயன்படும் இடமும் ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை யும் முதல் ஆட்டத்தைப் போல்தான்.

ஆடும் முறையும் நிலையும் முன்போலவேதான். ஆனால், விரட்டித் தொடுபவர் ஒரு காலால் நொண்டி யடித்துக் கொண்டு தாவி தாவிப் (Hopping) போய் விரட்டுவார். ஆட்டக்காரர்கள் அனைவரும் தப்பித்துக் கொள்ள ஒட வேண்டும்.

இந்த முயற்சியால் தொடப்படுபவர் புதிய விரட்டித் தொடுபவராக மாற, ஆட்டம் மீண்டும் தொடரும்.

எல்லைக்கு வெளியே யாராவது ஓடிவிட்டாலும் அவர் தொடப்பட்டவராவார்.