பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

19



4. உட்காரும் ஆட்டம் (Squat Tag)

பயன்படும் இடம்: இருக்கின்ற இடமான மைதானம் முழுவதையும் ஆடுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள

(o)fTÍ O.

ஆட்டக்காரர்கள்: குறிப்பிட்ட எண்ணிக்கையில் குறைத்துக் கொள்ளாமல், வருகின்ற மாணவ மாணவிகள் அனைவரையும் ஆடச் செய்யலாம்.

ஆடும் முறை: முதல் ஆட்டமுறை போல்தான். இதில் சில வேறுபாடுகள் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட விரட்டித் தொடுபவர், வேகமாக ஓடி வந்து விரட்டித் தொட முயல்வார். ஒட முடியாத பொழுது, தப்பிக்க விரும்புபவர்கள் அப்படியே கீழே உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

தரையில் உட்கார்ந்து கொண்டவர்கள் தொடப்பட மாட்டார்கள்.