பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

23


பின்னால் வந்து இடம் கிடைக்காதவர், வட்டம் சுற்றி

ஒடித் தட்டி ஒடுபவராக மாறிட, மீண்டும் ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

7. துள்ளித் தொடும் ஆட்டம் (Skip Tag)

ஆட்ட அமைப்பு: 5-வது ஆட்டத்தினை போல்தான் குழந்தைகள் கைகளைக் கோர்த்து பெரிய வட்டம் ஒன்று போடவேண்டும். வட்டத்தில் இல்லாத ஒருவர் விரட்டி தொடுபவராக இருந்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். -

ஆடும் முறை: இருபுறமும் கைகளை இடுப்பில், ஊன்றியவாறு, துள்ளி துள்ளி (தாவித்தாவி) வட்டத்தைச் சுற்றிச்சுற்றி அவர் வரவேண்டும். அவ்வாறு வரும் போதே, வட்டத்தில் நிற்கும் ஒருவரின் முதுகில் தொட்டுவிட்டுத்துள்ளிப்போக வேண்டும்.