பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


போட்டுவைக்க வேண்டும். அதற்குப் பிறகு, 5 அடிதுரம் தள்ளி, பெரிய வட்டம் ஒன்றையும் போட வேண்டும். ஆட்டத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவரையும் அந்த வட்டத்தைச் சுற்றி நிற்கச் செய்ய வேண்டும்.

ஆடும் முறை: விசில் சத்தத்திற்குப் பிறகு, ஆட்டக் காரர்கள் அனைவரும் வட்டத்தைச் சுற்றி ஓடி வர வேண்டும். அப்பொழுது இசைக் கருவியையும் இசைக்கலாம். அல்லது இசைத்தட்டும் போடலாம்.

இசைநிறுத்தப்படுகிற பொழுது, வட்டத்தைச் சுற்றி ஒடியவர்கள் ஒடிப்போய், நாற்காலி ஒன்றில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

உட்காருவதற்கு நாற்காலி கிடைக்காதவர்கள்ஆட்டம் இழக்கிறார்கள். ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை குறையக் குறைய, நாற்காலிகளின் எண்ணிக்கையையும், அதற்கு ஏற்ப் குறைத்துக் கொண்டே வர வேண்டும்.