பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

27


இதுபோல் குறைத்துக் கொண்டே வந்து, ஒருவர் கடைசியாக வரும் வரை ஆட்டத்தைத் தொடர வேண்டும். இந்த ஆட்டத்தை இசைநாற்காலி(Musical Chai) என்றும் கூறுவார்கள்.

10. அந்தகர் ஓட்டம்

(Blind Man's Race) -

ஆட்ட அமைப்பு: வகுப்பில் உள்ள குழந்தைகளை, சம எண்ணிக்கையில் இருப்பதுபோல் மூன்று அல்லது நான்கு குழுவாக முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழுவையும் வரிசை வரிசையாக நிறுத்த வேண்டும். -

ஒஇவொரு குழுவிலும் ஒடத் தொடங்கும் கோட்டிற்கு அருகில் (Starting Line) முதலாவதாக நிற்பவர்களின் கண்களை கைக்குட்டையால் கட்டி விட வேண்டும். கண் கட்டப்பட்டவர்கள் பக்கவாட்டில் கைகளை விரித்து, மற்றவர்களின் கைகளைப் பற்றிக் கோர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர்