பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஆதாரமாக (இப்பொழுது பார்த்தால்) சங்கிலி சேர்ந்தார் போல் நிற்பார்கள்.

அவர்களுக்கு முன்புறமாக, 50 அல்லது 60 அடி தூரத்தில் ஒரு எல்லைக் கோட்டைப் (Finishing Line) போட்டு வைத்திருக்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, கண் கட்டப்பட்டு கைகோர்த்துக் கொண்டிருப்பவர்கள், சேர்ந்து வேகமாக ஓடி எல்லையைக் கடந்துவிட்டு, மீண்டும் திரும்பிவர வேண்டும்.

அடையாளத்திற்காக, யாரையாவது நிறுத்தி வைத்திருக்கலாம். எல்லைக்கோடு வரை ஓடி முடிப்பதாக ஓட்டத்தை முடித்து வைக்கலாம் அல்லது திரும்பவும் தாங்கள் நின்ற இடத்திற்கே ஓடிவரச் செய்வதாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

இதுபோலவே, மற்றவர்களையும் கண்ணைக் கட்டி ஓடச் செய்ய வேண்டும். இதுவே அந்தகர் (குருடர்) ஓட்டம் என்னும் ஆட்டமாகும்.


11. வட்டம் சுற்றி வா

(Merry Go Round)

ஆட்ட அமைப்பு: ஆட வந்திருக்கின்ற ஆட்டக்காரர்களை சம எண்ணிக்கையுள்ள இரண்டு குழுவினராகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

25 அடி விட்டமுள்ள ஒரு வட்டமும், 30 அடி விட்டமுள்ள ஒரு வட்டமும் ஆக இரண்டு வட்டங்களைப் போட்டு வைக்க வேண்டும்.