பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


உடனே, அவரவர்கள் தங்கள் பாங்கரைத் (Partner) தேடிப்பிடித்து கைகோர்த்துக் கொண்டு நிற்க வேண்டும். தங்கள் பாங்கரைத் தேடித் திரிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் தனியே நிற்பவர். உடனே ஓடிப்போய் ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டு விடுவார்.

கடைசியில், ஆள்கிடைக்காமல் தனியே நிற்பவர் உள் வட்டத்தின் நடுவிலே போய் நிற்க, முன்போலவே ஆட்டம் தொடர்ந்து நடக்கும்.


12. கைதியைப் பிடி

(Catch the jail bird)

ஆட்ட அமைப்பு: வந்திருக்கும் ஆட்டக்காரர்களையெல்லாம் சம எண்ணிக்கையுள்ள இரண்டு குழுவினராகப் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மீதி இருக்கும் இரண்டு ஆட்டக்காரர்களையும் கைதி (Jail Bird) என்று கூறிவிட வேண்டும்.

ஒவ்வொரு குழுவையும், அதிலுள்ள ஆட்டக்காரர்களைக் கைகளைக் கோர்த்துக் கொண்டு, வரிசையில் நிற்க வைத்து, எதிர்க்குழு ஆட்டக்காரர்களைப் பார்ப்பதுபோல சற்று தூரம் இடைவெளி இருப்பதுபோல நிறுத்தி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு கைதி உண்டு. அந்தக் கைதி ஆடுகளத்தின் நடுவின் அதாவது அவர்கள் முன்னே சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்.

ஒவ்வொரு குழுவிலும் வலப்புறத்தில் உள்ள ஆட்டக்காரரே கைதியைத் தொடுவதற்கு உரிமை உள்ளவராவார்.