பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

33


ஓடாமல் உடனே அதே இடத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

விரட்டுபவர் மற்றவர்களை விரட்டிக் கொண்டும் இருப்பார். அதே நேரத்தில் உட்கார்ந்திருப்பவர் மேல் ஒரு கண்ணும் வைத்துத்தான் விரட்டுவார். இவ்வாறு விரட்டும்போது விரட்டப்படும் ஆட்டக்காரர்களில் யாராவது ஒருவர் தொடப்பட்டு உட்கார்ந்திருப்பவரைப் போய் தொட்டுவிட்டால் அவர் உடனே ஆட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

விரட்டித் தொடுபவர் மூன்று ஆட்டக்காரர்களைத் தொட்டுவிட்டால் வேறொருவர் விரட்டித் தொடுபவராக மாற ஆட்டம் தொடரும். அவர் மூன்று பேர்களைத் தொடுவதற்குள்ளாக இப்படி தொட்டு ஆட்டத்தில் கலந்து கொள்ளச் செய்வது ஆட்டத்திற்கு விறுவிறுப்பைக் கொடுக்கும்.


14. தப்பி ஓடுங்கள் பார்க்கலாம்

(Pump Pump Pullaway)

ஆட்ட அமைப்பு: ஆட்டக்காரர்களையெல்லாம் சம எண்ணிக்கை உள்ள இரண்டு குழுவாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

இடைவெளிதூரம் 100அடி இருப்பதுபோல இரண்டு குழுவினரையும் தூரமாக வரிசையாய் நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.

அவர்களுக்கு இடையேயுள்ள நடு இடத்தில் விரட்டித் தொடுபவர்(it) நின்று கொண்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு ஆட்டம் தொடங்குகிறது. நடுவில் நின்று கொண்டிருக்கும்