பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


கொண்டிருக்கும் குழுவே வெற்றி பெற்றது என்று கருதப்படும்.

இப்படியே ஆட்டம் தொடரும்.


16. வேடனும் பறவையும்

(The Hunter and the Birds)

ஆட்ட அமைப்பு: வகுப்பில் உள்ள குழந்தைகள் அனைவரையும் விளையாடச் சேர்த்துக் கொள்ளலாம். பள்ளியில் இருக்கின்ற இடம் முழுவதையும் விளையாடும் இடமாக அமைத்துக் கொள்ளலாம்.

ஆட்டக்காரர்களில் ஒருவரை 'விரட்டித் தொடுபவராகவும்' (it) மற்றவர்களைத் தப்பி ஓடுபவராகவும் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த விளையாட்டில் விரட்டுபவர் ‘வேடன்’ ஆகவும் விரட்டப்படுபவர்கள் 'பறவைகளாகவும்' இடம் வகிக்கின்றார்கள்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, ஆட்டம் தொடங்குகிறது. வேடன் முன்னால் செல்ல, மற்ற பறவைகள் அவன் கூடவே செல்ல வேண்டும். முன்னரே தீர்மானித்தவாறு ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பறவைகளை அழைத்துச் சென்ற வேடன், திடீரென்று ஒரு குரல் எழுப்ப வேண்டும்.

‘ஓடுங்கள்’ என்று வேடன் சத்தமாகக் குரல் கொடுத்தவுடன், பறவைகள் அவனிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தாங்கள் புறப்பட்ட இடத்திற்கே ஓடிவர வேண்டும்.

வேடனும் விரட்டிப் பிடிக்கிறபொழுது யார் முதலில் பிடிபடுகிறாரோ, அந்தப் பறவையே அடுத்த வேடனாக மாற முன் போல் ஆட்டம் தொடரும்.