பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா'

குறிப்பு: பிடிபட்டவர்கள் அனைவரும் வேடன்களாக மாற, முன்போலவே ஆட்டத்தையும் தொடரலாம். எப்படி விளையாட வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு ஆடுவது நல்லதாகும்.

ஆட்ட அமைப்பு:ஆட வருகின்ற மாணவர்கள் 32 பேர் என்று வைத்துக் கொள்வோம். ஒரு குழுவிற்கு 8 பேர் என்று 4 குழுவாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

நான்கு குழுவையும் ஓடத் தொடங்கும் கோடு (Starting Line) என்று நீண்ட ஒரு கோட்டைக் கிழித்து, அதன் முன்னே சற்று இடைவெளி விட்டு, ஒருவர் பின் ஒருவராக நிறுத்தி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவிற்கும் முன்புறத்தில் 6 அடி இடைவெளி இருப்பது போல 6 சிறு வட்டங்களை நேராகப் போட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு உருளைக்கிழங்கு அல்லது சிறு கட்டை அல்லது ஏதாவது ஒரு பொருள் இருப்பதுபோல் முதல் 5 வட்டங்களில் வைத்து 6-வது வட்டத்தை வெறுமையாக விட்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு ஆட்டம் தொடங்குகிறது. கோட்டின் முன்னால் நிற்கும் ஒவ்வொரு குழுவின் முதல் ஆட்டக்காரரும் ஓடத் தொடங்கி, முதல் வட்டத்தில் உள்ள காயை எடுத்துக் கொண்டுபோய் 6-வது வட்டத்தில் வைத்துவிட்டு மீண்டும் ஓடி வந்து 2-வது வட்டத்தில் உள்ள காயை எடுத்து ஓடிப்போய் 6-வது வட்டத்தில் வைத்து, இவ்வாறே 3, 4, 5 வட்டங்களில்