பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


உள்ள காய்களையும் எடுத்து 6-வது வட்டத்தில் ஒவ்வொரு முறையும் வைத்து, அதன் பிறகு தான் இருந்த குழுவில் தன் பின்னால் நின்று கொண்டிருந்தவரை (2-வது நபரை) தொட்டுவிட்டு, குழுவின் கடைசியில் போய் நின்று கொள்ள வேண்டும்.

தொடப்பட்ட இரண்டாம் ஆட்டக்காரர் 6-வது வட்டத்திற்கு நேராக ஓடி அங்கிருந்து ஒவ்வொரு காயாக எடுத்து வந்து ஒவ்வொரு வட்டத்திலும் பரப்பி வைத்துவிட்டு, தன் குழுவிற்கு வந்து தனக்குப் பின்னால் இருந்தவரைத் (3-வது நபரை) தொட்டுவிட்டு கடைசியில் போய் நின்று கொள்ள வேண்டும்.

இவ்வாறாக 8 ஆட்டக்காரர்களும் காயை ஒன்று ஒன்றாக 6-வது வட்டத்தில் சேர்த்தும் பிறகு மற்ற வட்டங்களில் பரப்பியும் ஆடி, முதலில் யார் ஓடத் தொடங்கும் கோட்டை வந்து தொடுகின்றார்களோ, அந்தக் குழுவே வெற்றி பெற்றதாகும்.

குறிப்பு: ஒவ்வொரு காயாகத்தான் எடுத்து ஒவ்வொரு வட்டத்திலும் வைக்க வேண்டும். அதுபோலவே கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்.


18. உட்கார்ந்து ஓடும் ஆட்டம்

(Sit and Run Relay)

ஆட்ட அமைப்பு: விளையாடவிருக்கும் மாணவர்களை சம எண்ணிக்கையுள்ள நான்கு குழுக்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

‘ஓடத் தொடங்கும் கோடு’ ஒன்றைப் போட்டு, அந்தக் கோட்டிற்குப் பின்னே, ஒவ்வொரு குழுவையும் ஒருவர் பின் ஒருவராக நிற்க வைக்க வேண்டும். அவர்களுக்கு