பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

39


முன்புறமாக 30 அடி தூரத்தில் ஒரு எல்லைக்கோடு ஒன்றையும் குறித்து வைக்க வேண்டும்.

அந்த எல்லைக்கோட்டில் நிற்கின்ற ஒவ்வொரு குழுவிற்கும் நேராக ஒரு சிறு வட்டம் போட வேண்டும். இதுதான் இந்த ஆட்டத்தின் அமைப்பாகும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, ஒவ்வொரு குழுவிற்கும் முதலாவதாக நிற்பவர் ஓடத் தொடங்கி வேகமாக ஓடி, எதிரே உள்ள அந்த சிறு வட்டத்தில் உட்கார வேண்டும். நன்றாகத் தரையில் உட்கார்ந்ததும், பிறகு எழுந்து ஓடி வரவேண்டும். வந்ததும் தன் குழுவில் தனக்குப் பின்னால் நின்று கொண்டிருப்பவரைத் தொட்டுவிட்டுத் தன் குழுவின் பின்புறம் போய் நின்று கொள்ள வேண்டும்.

குழுவின் இரண்டாமவர், தான் தொடப்பட்ட உடனே ஓடி, வட்டத்தில் உட்கார்ந்து ஓடி வந்து தன் பின்னே உள்ளவரைத் தொட்டுவிட்டு போய் தன் குழுவில் கடைசி ஆளாக நிற்க, இப்படியே ஆட்டம் தொடரும்.

எல்லோரும் ஓடிய பிறகு, கடைசி ஆளாக நிற்கும் ஆட்டக்காரர் முன்னவர்கள் போல ஓடி உட்கார்ந்து எழுந்து பிறகு ஓடி வந்து ஓடத்தொடங்கும் கோட்டை யார் முதலில் முடிக்கிறாரோ, அவரது குழுவே இந்த தொடராட்டப் போட்டியில் (Relay) வென்றதாகும்.


19. குறுக்கு நெடுக்கு ஓட்டம்

(Zig Zag Relay)

ஆட்ட அமைப்பு:18-வது ஆட்டத்திற்குப் போலவே மாணவர்களை 4 குழுவினராகப் பிரித்து ஒருவர் பின்